புதுடில்லி: அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு நீக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிருபர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
*மீன்பிடி உள்கட்டமைப்பை மேம்படுத்த 9 ஆயிரம் கோடி
*கடல் உள்நாட்டு மீன்பிடிப்பு பண்ணை மீன் வளர்ப்பை ஊக்குவிக்க 11 ஆயிரம் கோடி
*புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் டன் மீன்கள் உற்பத்தி வழி செய்யப்படும். 55 லட்சம் பேருக்கு வேலை
*மீன்வளத்துறை மேம்படுத்த பிரதமரின் மீன்வளத்திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடி
* மீன்பிடி வர்த்தகத்தை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம்
*இறால் இறக்குமதிக்கான அனுமதி 3 மாதம் நீட்டிப்பு
*கூடுதலாக 70 லட்சம் மீன் உற்பத்தியை எட்ட அரசு இலக்கு
கால்நடைத்துறை
*கால்நடைதுறைக்கு தடுப்பு மருந்து திட்டத்திற்கு ரூ. 13, 343 கோடி
*53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
*ரூ.15 ஆயிரம் கோடியில் கால்நடை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்படும்
*கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த அனைத்து விதமான கால்நடைகளுக்கும் 100 சதவீதம் தடுப்பு மருந்து போடபப்படும். 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
*கால்நடைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வாய் மற்றும் கால் சார்ந்த நோய்களை தடுக்கும் வகையில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.

*பால் பால்பொருட்கள் உள்கட்டமைப்பு 15 ஆயிரம் கோடி
* பால்பொருட்கள், சீஸ் உள்ளிட்டவற்றின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தி துறையில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது.பால் நெய் உற்பத்தி மற்றும் பால் சார்ந்த பொருள் உற்பத்தி இதன் மூலம் அதிகரிக்கும்.
*பால், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
*2.25 லட்சம் ஹெக்டேரில் மருத்துவ மூலிகை பயிர்களின் சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
*இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட முடியும்.
*தேனீ வளர்ப்பு திட்டங்களை ஊக்குவிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு. தேனீ வளர்ப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
*இதனால் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்.
* வெங்காயம், உருளை, தக்காளிக்கு செயல்படுத்தப்படும் ஆபரேசன் கிரீன்ஸ் அனைத்து காய்கறிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
* விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இருப்பு வைத்து கொள்ளும் பொருளுக்கு கட்டுப்பாடு இருக்காது.
*வேளாண் பொருட்களின் விநியோக சங்கிலியை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு
*டிஜிட்டல் முறையில் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை. இதற்காக சட்டம் கொண்டு வரப்படும்.
* மாநிலங்களுக்கு இடையே பொருட்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்
* உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடு இருக்காது
*அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு நீக்கப்படும்.
*நெல், கோதுமை, வெங்காயம் போன்றவற்றை எந்தளவுக்கு வேண்டுமானாலும் இருப்பு வைத்து கொள்ளலாம்.
* வெங்காயம், தக்காளி, பருப்புகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் இருப்பு வைப்பதற்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE