3 நிமிட வீடியோ காலில் 3700 பேரை வேலையிலிருந்து தூக்கிய ஊபர்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: ஊபர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட சுமார் 3500 பணியாளர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர், அவர்களுக்கு இன்றே கடைசி பணி நாள் என வேலையிழக்கும் செய்தியை தெரிவித்துள்ளார்.ஊபர் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர் ரபின் சாவ்லேவ், தனது ஊழியர்களுடன் வீடியோ காலில் உரையாடிய போது, 3700 பேரை வேலையில்
Uber, Lays Off, Zoom Call, Employees, customer service unit, Uber customer service, ஊபர், வேலையிழப்பு, ஜூம், வீடியோகால், பணியாளர்கள்,

வாஷிங்டன்: ஊபர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட சுமார் 3500 பணியாளர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர், அவர்களுக்கு இன்றே கடைசி பணி நாள் என வேலையிழக்கும் செய்தியை தெரிவித்துள்ளார்.

ஊபர் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர் ரபின் சாவ்லேவ், தனது ஊழியர்களுடன் வீடியோ காலில் உரையாடிய போது, 3700 பேரை வேலையில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளார். இது குறித்து ‛டெய்லி மெயில்' வெளியிட்ட செய்தியில், வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட 14 சதவீத பணியாளர்கள் அதாவது 3700 பேரை நீக்கியுள்ளதாக ரபின் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனது பணியாளர்களுடன் வீடியோ காலில் இணைந்த ரபின், அவர்களிடம், ‛கொரோனா காரணமாக வணிகம் இப்போதே பாதியளவு குறைந்துள்ளது. கடினமான மற்றும் துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், பல முன்னணி வாடிக்கையாளர் சேவை பணியாளர்களுக்கு வேலை இல்லை. இதன் விளைவாக, 3,700 பேரை நீக்குகிறோம்.


latest tamil news


உங்கள் பணி மிகச் சிறப்பாக இருந்திருந்தாலும், இன்றே உங்களது கடைசி பணி நாள். வேலையிழக்கும் ஊழியர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியான அறிவிப்பாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன்,' எனக் கூறியவாறு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளார். வெறும் 3 நிமிட வீடியோ காலில் 3700 பேர் வேலையிழந்த செய்தியை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பு இன்றி, ஒரே நாளில் வேலையை விட்டு நீக்குவது சரியான நடவடிக்கை அல்ல என அவர்கள் குற்றம் சாட்டினர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
15-மே-202023:06:05 IST Report Abuse
தல புராணம் ஒரு காரும் இல்லாமல் உலகின் பெரிய டாக்சி நிறுவனமாக மாறிய ஊபர், இன்று GRUBHUB, ZOMOTO போன்ற சமைத்த இடங்களில் இருந்து உணவு கொண்டுவரும் சேவையில் போட்டி போட ஆரம்பித்து பல காலமாகிறது. சிலவருடங்களுக்கு ஒருமுறை புதிய வைரஸ்கள் தோன்றி தொந்தரவு செய்வது போல, அவை உருமாறி மரபணு மாற்றம் அடைவது போலவும், ஊபர் போன்ற தொழில்நுட்ப சேவை நிறுவனங்களும் தோன்றி மறையும், புதிய உருவெடுக்கும். வைரஸ்களுக்கும் இவைகளுக்கும் ஈடு கொடுத்து நிற்கும் ஒருவரால் தான் இனிமேல் தொழில்நுட்ப வேலைகளில் நிலைத்து நிற்க முடியும். இல்லை அதெல்லாம் நமக்கு வராது என்றால் மிஸ்ட்டு கால் கட்சியில் சேர்ந்து கழுவிவிடும் வேலையில் சேருங்கள். அப்படி காசு பார்க்கிறவர்கள் இந்த கூட்டத்தில் நிறைய பேர்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
18-மே-202006:09:18 IST Report Abuse
 Muruga Velஇந்த கூட்டத்தில் நிறைய பேர்....
Rate this:
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
15-மே-202020:52:03 IST Report Abuse
r ganesan அமெரிக்காவின் திமிர் சொல்ல முடியாதது. வுலகத்துக்கே மனித உரிமைகளை பற்றி க்ளாஸ் எடுக்கும் நாட்டில் மனித உரிமைகளை மதிப்பதே கிடையாது.
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
16-மே-202021:17:14 IST Report Abuse
Rajeshமுதல்ல இந்தியாவை பற்றி யோசிக்கவும்..........
Rate this:
Dubuk U - Chennai,இந்தியா
17-மே-202012:07:38 IST Report Abuse
Dubuk Uஅமெரிக்காவை சொன்னா ஏன் கோவம்?... இங்க இருக்குற தப்ப மட்டும் சொல்லுவோம் அமெரிக்காவுல இருக்குற நல்லதமட்டும் சொல்லுவோம் எனும் போக்கு சரியா ?...
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் முன்னறிவிப்பு இன்றி, ஒரே நாளில் வேலையை விட்டு நீக்குவது சரியான நடவடிக்கை அல்ல என அவர்கள் குற்றம் சாட்டினர். முன்னாடியே சொல்லியிருந்தா வேற கம்பெனி ஓடிவந்து உங்களை அள்ளிக் கொண்டுபோய் வேலை போட்டு கொடுத்திருக்குமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X