பொது செய்தி

இந்தியா

தென் மேற்கு பருவமழை 4 நாட்கள் தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை மையம்

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020
Share
Advertisement
இந்திய_வானிலை_மையம், தென்மேற்கு_பருவமழை, தாமதம், South West monsoon, Indian Weather, Kerala, IMD, monsoon, rain, weather forecast

புதுடில்லி: கேரளாவில் ஜூன் முதல் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு நான்கு நாட்கள் தாமதமாகி ஜூன் 5ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்திய வானிலை மையம், இந்த ஆண்டு பருவமழை வழக்கமானதாக இருக்கும் என கணித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது இயல்பான தேதியுடன் ஒப்பிடும்போது சற்று தாமதமாகி ஜூன் 5க்கு முன்போ அல்லது பின்போ தொடங்கும் என கூறியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக மே 22ம் தேதி அந்தமான் தீவுக்கூட்டத்தை அடைய வேண்டிய பருவமழை 6 நாட்கள் முன்னதாக மே 16ம் தேதி அடையும் என எதிர்பார்க்கபப்டுகிறது. கடந்த ஆண்டு மே 20ம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை இரண்டு நாட்கள் முன்னதாக மே 18ல் தொடங்கியது. ஆனால் அதன் மந்தமான வேகம் காரணமாக ஜூன் 8 அன்று கேரளாவை அடைந்தது. ஜூலை 19ல் முழு நாட்டையும் உள்ளடக்கியது.


latest tamil news



ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையின் மூலம் 75 சதவீத மழையை நாடு பெறுகிறது. இம்மழை நாட்டின் விவசாயத்திற்கும், விவசாயத்தை சார்ந்திருக்கும் பொருளாதாரத்திற்கும், நீர்த்தேக்கங்கள் நிரப்புவதற்கும் முக்கியமானது. மற்றொரு நிகழ்வான வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளுக்கு மழை தரும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X