புதுடில்லி : கொரோனா தாக்கம் அதிகரித்து டில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,895 ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,254 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,518 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். கொரோனா பாதிப்புகளில் சிக்கி 123 பேர் பலியாகினர். நோய் பாதிப்புகளால் இன்று யாரும் பலியாகவில்லை. நேற்று, மொத்த கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 8,470 ஆக இருந்தது, இதில் 115 இறப்புகள் உள்ளன.

இந்தியாவின் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 81,970 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,967 கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரதுறை கூறுகையில், அதிகபட்சமாக 27, 524 நோய் பாதிப்புகளுடன் மஹா.,முன்னிலையில் உள்ளது. அவர்களில் 6,059 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர். 1,019 பேர் பலியாகினர். தமிழகத்தில் 9,674 பேர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 2,240 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 66 பேர் பலியாகினர். குஜராத்தில் மொத்தம் 9,591 கொரோனா பாதிப்புகளும், இதில் 3,753 நோயாளிகள் குணமடைந்தனர். 586 பேர் கொரோனாவால் பலியாகினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE