மங்களூருவில் 20 துபாய் பயணிகளுக்கு கொரோனா

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மங்களூரு : துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மங்களூருக்கு வந்த பயணிகளில் கர்நாடகாவை சேர்ந்த 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன் 179 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து மங்களூரு (கர்நாடகா) வந்தடைந்தது. மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் (Mangaluru International Airport) பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பாதுகாப்பு கருதி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த பயணிகளில் 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் 15 பேர் தட்சிண கன்னட (டி.கே) மாவட்டத்தையும் , மற்ற 5 பேர் உடுப்பி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் நோய் தொற்றால் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக டிகே மாவட்ட துணை ஆணையர் சிந்து பி ரூபேஷ்கூறுகையில், மாவட்ட தலைமையகமான டி.கே.யில் இருந்து 125 பயணிகளின் சோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன, அவர்களில் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.


latest tamil news



கொரோனா சோதனைகள் 12 நாட்களுக்குப் பிறகு மீண்டும் செய்யப்படும். இங்குள்ள 15 நோயாளிகள் வென்லாக் மருத்துவமனையிலும், ஐந்து பேர் டி.எம்.ஏ பை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மே 18 அன்று துபாயில் இருந்து அடுத்த நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விமான நிலையத்தில் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினார். கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இதன் கீழ் 3 நாட்களுக்கு முன் (மே.,12) இங்கு வந்த முதல் விமானத்தில் 38 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 12 மருத்துவ அவசர பணியாளர்கள் உட்பட 179 பேர் சென்றனர். இந்நிலையில் சூரத்கலை சேர்ந்த சுவாசகோளாறு காரணமாக சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால் டி.கே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்ந்தது. அதையொட்டி, கடந்த 1 மாதமாக பாதிப்பு ஏதும் இல்லாத உடுப்பியில் 5 பேர் புதிதாகபாதிக்கப்பட்டனர். டி.கே மாவட்டத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும், பலியானவர்கள் 5 பேர் எனவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-மே-202020:30:22 IST Report Abuse
Janarthanan இங்கு வந்து சில அறிவு ஜீவிகள் இந்த மிஷின் திட்டி கருத்து போட்டு கொண்டு இருக்கிறார்கள்?? இது ஒரு எதிர் பாராத தருணம் இந்த சமயத்தில் உயிரை பணய வைத்து விமானிகளை விமானங்களை இயக்குகிறார்கள் ? ஒவ்வரு விமானமும் sanitize பண்ண வேண்டும் இனிமேல் ஏர் travel costly ஆக தான் இருக்க போகிறது? வேலை இருக்கும் ஒவ்வரத்திற்கும் கம்பெனி டிக்கெட் இருக்கு கொடுக்க வில்லை என்றால் அந்த ஊரு அரசிடம் குறை சொல்லுங்க ??? விசிட் /ஊரு சுற்ற வந்தவன் எல்லாம் காசு இல்லை பொய் சொல்லாதீங்க ???? சும்மா தூற்றுவதை நிறுத்தி தொலையுங்க ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X