கொரோனாவை முதலில் விரட்டியடித்த ஸ்லோவேனியா | Slovenia becomes first European nation to declare an end to covid-19 epidemic | Dinamalar

கொரோனாவை முதலில் விரட்டியடித்த ஸ்லோவேனியா

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020
Share
புதிய கொரோனா தொற்று இல்லாத நிலையில் ஸ்லோவேனியா தனது எல்லைகளை திறந்துவிட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவை முதலில் விரட்டிய ஐரோப்பிய நாடு ஸ்லோவேனியா என்ற பெருமையை பெற்றுள்ளது.இத்தாலியின் எல்லையில் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மலை நாடு, ஸ்லோவேனியா, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும் அதன் எல்லைகளைத் திறந்துள்ளது, அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத குடிமக்கள்

புதிய கொரோனா தொற்று இல்லாத நிலையில் ஸ்லோவேனியா தனது எல்லைகளை திறந்துவிட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவை முதலில் விரட்டிய ஐரோப்பிய நாடு ஸ்லோவேனியா என்ற பெருமையை பெற்றுள்ளது.


இத்தாலியின் எல்லையில் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மலை நாடு, ஸ்லோவேனியா, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும் அதன் எல்லைகளைத் திறந்துள்ளது, அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத குடிமக்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியம் என தெரிவித்துள்ளது.


வியாழக்கிழமை(நேற்று) நிலவரப்படி சுமார் 1,500 கொரோனா வைரஸ் பாதிப்புகளும் மற்றும் 103 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.latest tamil newsஇது குறித்து ஸ்லோவேனியா பிரதமர் ஜானெஸ் ஜான்சா கூறியதாவது:கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதால் இனி அசாதாரண சுகாதார நடவடிக்கைகள் தேவை இல்லை. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், சமூக தொற்றாக மாறாததால், தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது என்றார்.


latest tamil news
கடந்த 14 நாட்களாக ஒவ்வொரு நாளும் ஏழுக்கும் குறைவான புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக நாடு உறுதிப்படுத்தியதை அடுத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை அறிவித்தனர்.இப்போது நாட்டில் கூடுதலாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X