பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் புதிதாக 310 பேருக்கு கொரோனா

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Chennai, coronavirus, Tamil Nadu, COVID 19, TN Fights Corona, Corona news Updates, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases, சென்னை

சென்னை: சென்னையில் இன்று (மே 15) புதிதாக 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 5,946 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் புதிதாக 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகள் எண்ணிக்கை 10,108 ஆகவும், பலி எண்ணிக்கை 71 ஆகவும் அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில், சென்னை வந்த மாலத்தீவை சேர்ந்த ஒருவரும் இதில் அடக்கம். இதனையடுத்து மொத்த பாதிப்பு 5,946 ஆக உயர்ந்தது. இன்று தமிழகத்தில் உயிரிழந்த 5 பேரில் 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 53 வயது பெண், 61, 57, 32 வயது நிரம்பிய ஆண்கள் என 4 பேர் சென்னையில் உயிரிழந்தனர். ஒருவர் தூத்துக்குடியில் பலியானார். இதுவரை சிகிச்சைக்குப்பின் 783 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்.

சென்னைக்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 21, செங்கல்பட்டில் 20, காஞ்சியில் 11, மதுரை, தேனியில் தலா 6, கடலூர், திருவண்ணாமலையில் தலா 3, பெரம்பலூரில் 2, திண்டுக்கல், தென்காசி, தஞ்சை, விருதுநகரில் தலா ஒருவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.


மாவட்ட வாரியாக விவரம்:


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
16-மே-202000:24:56 IST Report Abuse
Raj சிங்கில் ஸோர்ஸா மல்டிபில் ஸோர்ஸ்ஸா? 😁
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
15-மே-202021:33:14 IST Report Abuse
sundarsvpr முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யவேண்டும்.. இருப்பின் வழக்கு தொடர்வது மட்டுமில்லாமல் மருத்துவ செலவினை வசூல்செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X