ஆந்திராவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகளில் மஹா., முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் மற்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் கூடிக்கொண்டே செல்கிறது. ஆந்திராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து 2000 ஐ கடந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,157 ஆக உள்ளது. நோய் தொற்றால் ஒருவர் பலியானார். மொத்த பலிகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



நோய் பாதிக்கப்பட்ட 45 நபர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களில் 34 பேர் மஹாராஷ்டிராவையும், 11 பேர் ராஜஸ்தானையும் சேர்ந்தவர்கள். கடந்த 24 மணிநேரத்தில் 9.038 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 102 பேர் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஆந்திர மாநில சுகாதாரதுறை இன்று காலை அறிக்கையில் கூறியதாவது : மாநிலத்தில் கொரோனாவால் 48 பேர் பலியாகினர். 1252 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். 857 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். மேலும் சித்தூர் மற்றும் நெல்லூரில் தலா 14 பேர் , கிருஷ்ணா மாவட்டத்தில் 9 பேர் மற்றும் கர்னூல் மாவட்டத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X