பொது செய்தி

இந்தியா

இந்தியாவில், 85,940 பேருக்கு கொரோனா: பாதிப்பில் சீனாவை முந்தியது

Updated : மே 16, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
China, India, Corona Virus, Covid 19, சீனா, இந்தியா, கொரோனா

புதுடில்லி: கொரோனா தொற்று பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை முந்திய இந்தியா, அதிக பாதிப்புள்ள நாடுகளில் 11வது இடம் பிடித்தது.

சீனாவிலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர் பலி வாங்கி வருகிறது கொரோனா. இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த சீனா, உயிர்பலியையும் தடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil newsஅதே சமயம், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை மே 17ம் தேதிக்கும் பின், 4வது முறையாகவும் நீட்டிக்க உள்ளது. இருப்பினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்பலியும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இன்று(மே 16) காலை 9:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 940ஆக உயர்ந்தது. 2,752 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை முந்திய இந்தியா, அதிக பாதிப்பு பட்டியலில் 11வது இடத்தை பிடித்தது.

உலகில் இதுவரை 213 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசுக்கு, 45.80 லட்சத்துக்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalam - Salem,இந்தியா
17-மே-202009:02:11 IST Report Abuse
Kalam சீனா கொடுத்த கணக்கை அப்படியே நாங்க நம்பிட்டோம்.
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
17-மே-202007:43:27 IST Report Abuse
Ambika. K நாம் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும் . இது சுவாசம் தொடர்பான தொற்று. அரச மரம் ஆலமரம் வேப்ப மரம் மற்ற மருத்துவ தொடர்புடைய செடி கொடிகள் உள்ள இடங்களில் பரவுதல் குறைவு Koronavirkku உடனடி சிகிச்சை இந்த மரங்களில் இருந்து வரும் பிராண வாயுவை சுவாசித்தல் அல்லது இந்த மரங்களில் விழும் குச்சி மற்றும் இதன் பழம் கொட்டைகளை எரித்து அதன் புகையை சுவாசித்தல். ( அந்த காலத்தில் ஹோமம் வளர்த்து வரும் புகையை சுவாசிப்பது போல ). இது மெதுவாக korona vyrasai கட்டுப்படுத்தும் பிறகு அழிக்கும் பரவா விடாது. இது இன்றைய நடை முறையில் எப்படி சாத்தியம். முதற்கண் புகை பிடித்தல். புகையிலை இல்லாமல் இந்த ஹோம வஸ்துக்களை ஒரு ஹுக்க போன்ற அமைப்பில் korona பாதித்த நோயாளியை புகை பிடிக்க வேண்டும். முதலில் கடினம் கொஞ்சம் பழகி விட்டால் சாத்தியமே. அப்படி ஹக்க வழியா க காற்றை உள் இழுக்கும்போது அவர் மூச்சு விடும் திறன் அதிகரிக்கும் அதனுடன் மருந்து சேர்ந்த புகை என்னும் போது அது koronavai கட்டு படுத்தும் இந்த ஹோம பொருட்களுடன் சித்த ஆயுர்வேத marunthugalayum சேர்க்கலாம் அது இந்த வியாதியை விரைவில் குண படுத்தும். இதை சொல்லும் நான் ஒரு Doctor illai. Idhai சரியான நபர்களுக்கு தினமலர் மூலம் தெரிவிக்க ஆசை படுகிறேன்.
Rate this:
Anandan - chennai,இந்தியா
18-மே-202023:47:48 IST Report Abuse
Anandanஇந்த whatsapp கதையை எப்படிங்க நம்புறது?...
Rate this:
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
17-மே-202007:20:44 IST Report Abuse
aryajaffna எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கின்றது, இது கீதையில் சொல்லப்படட உண்மை , உலகில் அட்டுழியம் செய்த அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கொரோன என்ற நீதி தேவதையின் முன் பதில் சொல்லும் காலம் வந்திருக்கின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X