பொது செய்தி

இந்தியா

மஹாவில் புதிதாக ஒரே நாளில் 1,576 பேருக்கு கொரோனா: 46 பேர் பலி

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மும்பை: மஹாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,576 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த ஒரு நாளில் 41 பேர் கொரோனாவுக்கு மாநிலத்தில் பலியாகி உள்ளனர்.



latest tamil news



கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டின் சில மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மஹாராஷ்டிரா கொரோனாவால் இந்தியாவிலேயே அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 1,576 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 21,467 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.068 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



மும்பை நகரில் மட்டும் நேற்று ஒரே நாளில் 998 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்நகரில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,579 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 85,000 ஐ கடந்த நிலையில் அது கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
16-மே-202011:41:34 IST Report Abuse
Visu Iyer அட பாவமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X