சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ராசி வேண்டும்!

Added : மே 15, 2020
Share
Advertisement
 ராசி வேண்டும்!

ராசி வேண்டும்!

'பதவியை எதிர்பார்த்து, ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு கூடு பாய்ந்தவர்கள் எல்லாருக்குமே ஒளிமயமான அரசியல் எதிர்காலம் அமைந்து விடுவது இல்லை. சிலருக்கு மட்டும் தான், அந்த பாக்கியம் கிடைக்கிறது; அவர்களில் இவரும் ஒருவர்' என, சிவசேனாவின் ராஜ்யசபா எம்.பி.,யான பிரியங்கா சதுர்வேதியை பார்த்து, பெருமூச்சு விடுகின்றனர், பதவி கிடைக்காத அரசியல்வாதிகள். பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர். சமூக வலைதளங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வந்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் இவரை பாராட்டினாலும், இவருக்கு முக்கியமான பதவி எதுவும் தரப்படவில்லை. காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பிரியங்கா, கடந்தாண்டு காங்கிரசுக்கு, 'குட் பை' கூறி விட்டு, சிவசேனாவில் ஐக்கியமானார். சிவசேனாவிலும், சமூக வலைதளங்கள் மூலமாக, கட்சி தலைவரும், மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே இமேஜை உயர்த்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். அவரது முயற்சி வீண் போகவில்லை. சில மாதங்களுக்கு முன், சிவசேனா மேலிடம், பிரியங்காவுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை பரிசாக அளித்தது. பதவி ஆசையில், காங்கிரசில் இருந்து, பா.ஜ., உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு தாவிய முக்கிய பிரமுகர்கள் பலரும், 'அதற்கெல்லாம் ஒரு ராசி வேண்டும் போலிருக்கிறது. நமக்கு இந்த ஜென்மத்தில் எந்த பதவியும் கிடைக்காது' என, புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X