சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: நடுத்தர மற்றும் ஏழை மக்கள், 80 சதவீதம் வாழும் நம் நாட்டில், ஊரடங்கு காலத்தில் ஒரு பட்டினி சாவு கூட இல்லை. கொரோனா சிகிச்சைக்காக, 60 ஆயிரம் ரயில் பெட்டிகள் உடனுக்குடன் உருவாக்கப்பட்டன. பல தரப்பினருக்கு, 9 லட்சம் கோடி ரூபாயை, வங்கி வாயிலாக மத்திய அரசு செலுத்தியுள்ளது.


'டவுட்' தனபாலு: இதெல்லாம், 'ஏசி' அறையில் இருந்தபடி, வெளியிடப்படும் அறிக்கை என்பது, நடுநிலையாளர்களின் கருத்து. இரவில், நெடுஞ்சாலைகளில் சென்று பாருங்கள். குற்றுயிரும், குலை உயிருமாக, ஆயிரக்கணக்கான, வட மாநிலத்தவர் நடந்து செல்கின்றனர். அவர்களுக்கு, யாரும் சிறு உதவி கூட செய்வதில்லை. இதை பார்க்கும் போது, பா.ஜ., தலைவர்கள், இரவில் வெளியே வருவது இல்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!



தி.மு.க., தலைவர், ஸ்டாலின்:
மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமனின், இரண்டாவது நாள் அறிவிப்பில், ஒவ்வொரு குடும்பத்துக்கும், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற, தி.மு.க.,வின் கோரிக்கையும், 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்ற, காங்கிரசின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. மத்திய அரசின் அறிவிப்பு, ஆபத்துக்கு உதவாத பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம், தாகத்தை தீர்க்காத தண்ணீர் போன்றது தான்.

'டவுட்' தனபாலு: ஏற்கனவே வயதாக ஆக, உங்களுக்கு, உங்கள் தந்தை, கருணாநிதியின் குரல் வளம் வந்து கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் விடும் அறிக்கைகளை பார்த்தால், கருணாநிதியின் எழுத்தாற்றலும் வந்து விட்டதோ என்ற, 'டவுட்' வருகிறது. ஏனெனில், இந்த அறிக்கையில், அவ்வளவு எதுகை, மோனைகள் உள்ளன!



மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்:
அடுத்தவர் மீது பழி போடுவது, தி.மு.க.,வுக்கு வழக்கம். அரசியல் ரீதியாக ஆதாயம் தேட வேண்டும் என்பதற்காக, தலைமை செயலரிடம் மனு கொடுத்தனர். எங்களுடன் மோத முடியாததால், தலைமை செயலரை மிரட்டுகின்றனர். தலைமை செயலரை, அவர்கள் சந்தித்தது, திட்டமிட்ட நாடகம்.

'டவுட்' தனபாலு: தி.மு.க., - எம்.பி.,க்கள், தலைமைச் செயலர் சந்திப்பு விவகாரத்தை, இரு கட்சிகளும், வேண்டுமென்றே அரசியலாக்கி வருகின்றன என்பது, பொதுமக்களுக்கு, 'டவுட்' இன்றி புரிந்திருக்கும். எப்படியோ, கொரோனா தவிர்த்து, வேறு அரசியல் செய்திகளை கேட்கவும், அறியவும் தான் மக்கள் விரும்புகின்றனர்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
16-மே-202023:24:17 IST Report Abuse
Anantharaman Srinivasan கருணாநிதியின் எழுத்தாற்றலும் வந்து விட்டதோ என்ற, 'டவுட்' வருகிறது. வயதான காலத்தில் தள்ளாமைதான் வரும். எழுத்தாற்றல் வராது. அப்படியே வந்தாலும் அது சுத்தியலின் ஓசையாகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
16-மே-202015:13:11 IST Report Abuse
C.Elumalai ஆல் இந்தியா பப்புவும், தமிழகபப்புவும் தர்மவான்கள் கொரோனா பாதிப்பு நிதிக்கு, அள்ளியள்ளி, கொடுத்த உத்தமர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X