சிங்கப்பூரில் மேலும் 793 பேருக்கு கொரோனா

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020
Share
Advertisement

சிங்கப்பூர் : கொரோனா தாக்கம் அதிகரித்து சிங்கப்பூரில் புதிதாக 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. சிங்கப்பூரிலும் நாளுக்கு நாள் கொரோனா நோய் பாதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இன்று புதிதாக 793 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,891 ஆக அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்களில்ஒருவர் சிங்கப்பூரை சேர்ந்தவர். மற்றவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்களில் பலர் கட்டுமான பணி மற்றும் உணவு விடுதி போன்ற பல்வேறு தொழில்களில் பணிபுரிபவர்கள்.


latest tamil news



கடந்த 24 மணிநேரத்தில் நோய் பாதிப்புகளில் இருந்து 1,164 பேர் குணமடைந்தனர். இது ஒரே நாளில் குணமடைந்த அதிக பாதிப்புகளின் எண்ணிக்கையாகும். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. ஜன.,23 ல் முதல் பாதிப்பு பதிவானதில் இருந்து தற்போது வரை 5,964 பேர் அல்லது மொத்தம் 23 சதவீதம் பேர் நோய் தொற்றில் இருந்துகுணமடைந்தனர்.

சிங்கப்பூரில் நேற்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், மீதமுள்ள 750 கொரோனா பாதித்தவர்கள் வெளிநாடு தொழிலாளர்கள் தான் என தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூரில் பணியாற்றும் 323,000 தொழிலாளர்களில் சுமார் 7.4 சதவீதம் பேர் இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.தற்போதைய நிலவரப்படி, தெற்காசிய நாடுகளில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சிங்கப்பூர் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X