ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்காது: உலக சுகாதார அமைப்பு

Updated : மே 15, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஜெனிவா: ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்காது என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.



latest tamil news



ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புறங்களில் கொரோனா சமூகப் பரவலாக மாறும் போது அங்கு 26 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டு பலி எண்ணிக்கை 2 லட்சம் அளவிற்கு இருக்கும் என உலக சுகாதார அமைப்பு இதற்கு முன் கணித்திருந்தது.


latest tamil news



அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகள் நோய்த் தடுப்பு முயற்சிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டன. அந்நாடுகளில் சமூக விலகல், கை கால்கள் கழுவுதல் போன்ற பாதுகாப்பு முறைகளை மக்கள் கடைபிடிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில், அரசுகளின் முயற்சியாலும் மக்களின் ஒத்துழைப்பினாலும் கொரோனா தொற்று அதிக அளவுக்கு இருக்காது. என்று உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


latest tamil news



அந்நாட்டில் மக்களின் உணவுத் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் உலக சுகாதார அமைப்பு இணைந்து பணியாற்றி வருகிறது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் மூலிகை மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள ஆப்பிரிக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உலக சுகாதார அமைப்பு தயாராக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-மே-202007:56:50 IST Report Abuse
ஆப்பு அங்கே கொரோனாவுக்கு முன்னாடி பட்டினி சாவுகள் அதிகம்.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
16-மே-202000:28:32 IST Report Abuse
kumzi சீனாவின் அடிமை ஸ்தாபனம் சொல்வதெல்லாம் உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X