தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

Updated : மே 17, 2020 | Added : மே 15, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement
புதுடில்லி :தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மது விற்பனை தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, மார்ச், 24லிருந்து, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில், மாநில அரசின்
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடில்லி :தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மது விற்பனை தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, மார்ச், 24லிருந்து, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே, இந்த மாத துவக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, ஆந்திரா, கர்நாடகா, டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.


சமூக விலகல்தமிழகத்தைச் சேர்ந்த மதுப் பிரியர்கள், ஆந்திரா மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால், மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி, 7ம் தேதி முதல் மதுக்கடை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, சில அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது. 'மதுக்கடைகளில் சமூக விலகல் நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.
'ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காட்டுவோருக்கு மட்டுமே மது வழங்க வேண்டும்' என, உயர் நீதிமன்றம் பல நிபந்தனைகளை விதித்தது. இதையடுத்து, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள். 7ம் தேதி திறக்கப்பட்டன. மதுக்கடைகள் முன் அதிக அளவில் கூட்டம் கூடியது. சமூக விலகல் நடவடிக்கையும் கேள்விக்குறியானது. இதையடுத்து, நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பிலும், மற்றும் சில வழக்கறிஞர்கள் சார்பிலும், 'நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தமிழக அரசு பின்பற்றவில்லை. 'எனவே, மதுக்கடைகளை மூட வேண்டும்' என, மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மதுக்கடைகளில் சமூக விலகல் நடவடிக்கை பின்பற்றப்படாததால், உடனடியாக அவற்றை மூட வேண்டும். 'ஆன்லைன்' மூலமாக மது விற்பனை செய்வது குறித்து, மாநில அரசு சார்பில் பரிசீலிக்கலாம்' என, 8ம் தேதி
தீர்ப்பளித்தது.


மேல் முறையீடுஇதைத் தொடர்ந்து, அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், 'இந்த வழக்கை விசாரிக்கும் முன், எங்கள் கருத்துக்களையும் கேட்க வேண்டும்' எனக் கோரி, 'கேவியட்'
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள், எல்.நாகேஷ்வர ராவ், எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடியதாவது:மது விற்பனை என்ற நடைமுறை, மாநில அரசின் கொள்கை சார்ந்த முடிவு. இந்த விஷயத்தில், மது விற்பனை எப்படி நடக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் நிபந்தனை விதிக்க முடியாது. ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யலாம் என, உயர் நீதிமன்றம் கூறுகிறது; இது எப்படி சாத்தியம்?மூன்றாவது நபர் ஒருவர், மதுவை, வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் செல்வதை எப்படி அனுமதிக்க முடியும்?மதுவில் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.மாநிலம் முழுதும், மது வகைகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வது சாத்தியமற்றது.
முறையான சட்ட விதிமுறைகளை வகுத்த பின் தான், இதற்கான நடவடிக்கையை துவக்க முடியும். மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில், மதுக்கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை நடக்கிறது. மதுக்கடை திறப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுக்கள்
தள்ளுபடி செய்யப்பட்டன.


உத்தரவுக்கு தடைமது வகைகளை நேரடி தொடர்பில்லாமல் விற்பனை செய்வது குறித்து, சம்பந்தபட்ட மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறும் வகையில், மதுக்கடைகளை திறக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் வாதிட்டார். இதையடுத்து, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், ''மது விற்பனை என்பது, அடிப்படை உரிமை அல்ல. ''தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான், எங்கள் கோரிக்கை. எனவே, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:மாநிலங்களில் மது விற்பனை செய்வது குறித்த விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம், அந்தந்த மாநில அரசுகளுக்கே உள்ளது. மாநில அரசின் கொள்கை சார்ந்த விஷயங்களில் தலையிட முடியாது. மது விற்பனை செய்வது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளுக்கும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


ஐகோர்ட்டில் விசாரணை நிறுத்தம்மதுக்கடை திறப்பு தொடர்பாக, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து, உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை, நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில், மதுக்கடைகள் திறப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை, தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி, நீதிபதிகள், வினீத் கோத்தாரி, பி.என்.பிரகாஷ் அடங்கிய, 'பெஞ்ச்' நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்தது. வழக்கறிஞர்களின் வாதங்களுக்குப் பின், அட்வகேட் ஜெனரலின் வாதத்துக்காக நேற்று தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில், மதுக்கடைகளை மூடவும், நிபந்தனைகள் விதித்ததையும் எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள், நேற்று விசாரணைக்கு வந்தன.
உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், ஒரே நேரத்தில் விசாரணை நடந்தது. உயர் நீதிமன்றத்தில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயணன் வாதாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருப்பதாக, அட்வகேட் ஜெனரலுக்கு தகவல் வந்தது. உடனே, உயர் நீதிமன்ற அமர்வில், அந்த தகவலை, அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் விசாரித்து, உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்போது இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது எனக்கூறி, விசாரணையை தள்ளி வைப்பதாக, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தெரிவித்தது.


எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்!* தமிழகத்தில் இன்று, 3,600 மது கடைகள் திறக்கப்படுகின்றன
* ஒருவருக்கு இவ்வளவு தான் என, மது வகைகள் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை; ஒருவர் எவ்வளவு மது வகைகளையும் வாங்கலாம்
* மது வகைகள் வாங்க, ‛ஆதார்' கார்டு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை


Advertisement


வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-202016:11:39 IST Report Abuse
Mani இதை எதிர்த்து தி மு க ஏன் வழக்கு தொடுக்கல ? வேற எதாவது சொல்லி stay வாங்கலாம்... ஆலைகள் நம்மளது வருமானம் போய் விடும்.... நடத்துங்க டா ஏமாற மக்க இருக்கற வர...
Rate this:
Rajas - chennai,இந்தியா
16-மே-202021:31:11 IST Report Abuse
Rajasஎப்போது பார்த்தாலும் அவன் செய்யவில்லை இவன் செய்யவில்லை என்று அடுத்தவனை காட்டியே தப்பி விடுவது உங்கள் வழக்கம் தான். உங்கள் கட்சி பதிவு பெற்ற அதிலும் மத்தியில் ஆளும் கட்சி தானே. இங்கே தமிழ்நாடு பிஜேபி இந்த வழக்கில் என்ன செய்தது. மது பிரச்சினையில் இப்படி என்றால் சிலை திருட்டு வழக்கில் மூச்சு விடும் சத்தம் கூட கேட்கவில்லை....
Rate this:
Cancel
16-மே-202015:31:46 IST Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி தற்போது தெரிகிறது நம் ஆட்சியாளர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்று. எதற்கும் உதவாத கல்லூரி படிப்பைக் கூட முடிக்கத் திறமையில்லாத ஒருவனுக்கு அவனைச் சார்ந்தவர்கள் குடும்பத் தலைவன் என்ற பதவி கொடுத்தார்களாம். ஆனால் தன் குடும்பத்திற்கு ஒரு கஷ்டம் வரும் போது தன் மக்களை ...அனுப்பி தன் மக்களைக் கெடுத்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டானாம். இவ்வாறு செய்பவர்களுக்குப் பெயர் தலைவனா? திறமை இல்லாதவனை அரியணை ஏற்றினால் தன் இடத்தை தக்க வைக்க அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
16-மே-202016:20:26 IST Report Abuse
Srinivas....கல்லூரி பெண்களை உயிரோடு எரித்த கொடும் குற்றவாளிகளை வெளியில் விட்டவர்கள் இந்த மிகச்சிறந்த ஆட்சியாளர்கள். கோயில் சிலை திருட்டு, சொத்துக்கள் கொள்ளை என்று மிக மிக நல்லவற்றையே செய்து மக்களுக்கு தொண்டாற்றும் மகான்கள். பொள்ளாச்சி, கோவை என்று பல நூறு பெண்களின் அப்பாவி பெண்களின் வாழ்க்கையை சீரழித்த ஆளும் கட்சிக்காரர்கள்....
Rate this:
Santhosh Gopal - Vellore,இந்தியா
16-மே-202017:24:00 IST Report Abuse
Santhosh Gopalஸ்ரீனிவாஸ். நீங்கள் எப்பவுமே கோயில் சிலை திருட்டை பற்றியே பேசுகிறீர்கள். கோயில் சிலை திருட்டை நோண்டினால் திமுக காரர்கள் தான் பெருவாரியாக மாட்டுவார்கள். கடப்பா கல்லை திருடியதை போல.... திருடாமல் திமுகவால் இருக்க முடியாது....
Rate this:
Rajas - chennai,இந்தியா
16-மே-202021:35:27 IST Report Abuse
Rajasசிலை கடத்தல் விவகாரத்தில் அதிகமுகவை விட பிஜேபியின் மவுனம் தான் பலரை பேச வைத்தது. இந்து இந்துமத கொள்கைகள் என்ற கட்சி இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன். சிலை கடத்தியவன் எவனாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்....
Rate this:
Cancel
Santhosh Gopal - Vellore,இந்தியா
16-மே-202014:45:27 IST Report Abuse
Santhosh Gopal நானும் டாஸ்மாக் திறப்பை எதிர்க்கிறேன் ஏன் என்றால் திமுகவிற்கு தான் இதனால் கொள்ளை வருமானம். ஆனால் கொரோனா சமயத்தில் மூடுவதை எதிர்க்கிறேன் ஏன் என்றால் அணைத்து அரசு பொது நிறுவனங்களும் லாக் டவுனால் மூடிவிட்டது, வருவாய் முற்றிலும் நின்றுவிட்டது. மற்ற மாநிலங்களும் அவசர அவசரமாக மது கடைகளை திறந்துவிட்டது. தமிழ்நாட்டில் மது கடைகளை திறக்கவில்லை என்றால் அந்த வருமானம் அனைத்தும் மற்ற மாநிலத்திற்கு செல்லும். புதுச்சேரி நாராயணசாமி கூட வருமானம் இல்லாமல் அரசை நடத்தமுடியாது, ஆகையால் மது கடை உரிமையாளர்களிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றார். டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று கூறுபவர்கள், உடனடியாக வருமானம் வரும் வழிகளை கூறலாமே? ஏன் எதற்கெடுத்தாலும் சென்னை உயர்நீதிமன்றம் சென்று அரசின் திட்டங்களுக்கு எதிராக தடை வாங்கும் சுடலை, இந்த விஷயத்தில் அமைதி காக்கிறார்? ஏன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யவில்லை? ஏன் டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை கேட்டு வழக்கு தொடரவில்லை? ரஜினி கூட கர்நாடகாவில் மது கடைகளை திறந்துவிட்டதை பற்றி ஒரு வார்தை கூட சொல்லவில்லை. பெங்களூரு, ஆந்திர மாநிலங்களில் தமிழ்நாட்டின் வருமானம் மது கடைகளை திறந்த ஒரே நாளில் பல கோடி சென்றது.
Rate this:
Rajas - chennai,இந்தியா
16-மே-202023:14:17 IST Report Abuse
Rajas////நானும் டாஸ்மாக் திறப்பை எதிர்க்கிறேன் ஏன் என்றால் திமுகவிற்கு தான் இதனால் கொள்ளை வருமானம்/// எதிர்க்கட்சியான திமுகவிற்கு வருமானம் தரக்கூடிய, தன்னுடைய ஆட்சிக்கு கேட்ட பெயர் வரக்கூடிய மது விற்பனையை ஏன் எடப்பாடி ஆரம்பிக்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X