எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'இ - பாஸ்' முறையில் திடீர் மாற்றம்: கொரோனா பரவலை தடுக்க அதிரடி!

Updated : மே 16, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
'இ - பாஸ்' முறையில் திடீர் மாற்றம்: கொரோனா பரவலை தடுக்க அதிரடி!

'கொரோனா' பரவலை தடுக்கும் வகையில், 'இ - பாஸ்' வழங்கும் அதிகாரம், செல்ல வேண்டிய மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


அவசிய தேவை



நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், மருத்துவ பரிசோதனை, நெருங்கிய உறவினர் திருமணம் மற்றும் இறப்புக்கு செல்ல விரும்புவோர், 'ஆன்லைன்' வழியே விண்ணப்பித்தால், அவர்களுக்கு, 'இ - பாஸ்' வழங்கப்படுகிறது.ஒரு மாவட்டத்தில் இருந்து அவசிய தேவைக்காக, மற்ற மாவட்டம் செல்ல விரும்புவோருக்கு, அவர் வசிக்கும் மாவட்டத்தின் கலெக்டர், 'இ - பாஸ்' வழங்கி வந்தார்.இதனால், மாவட்டத்தில் இருந்து வெளியே செல்லும் நபர்களின் விபரம், அந்த மாவட்ட கலெக்டரிடம் இருந்தது.

ஆனால், தங்கள் மாவட்டத்துக்குள் வரும் நபர்கள் குறித்த விபரம், அவர்களுக்கு தெரிவதில்லை. எனவே, மாவட்டத்திற்குள் வந்தவர்களை கண்டறிந்து, கொரோனா பரிசோதனை செய்வது, தனிமைப்படுத்துவது சிரம மானது.இதை தவிர்ப்பதற்காக, 'இ - பாஸ்' வழங்கும் நடைமுறையில், நேற்று முதல், மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது.


அனுமதி கோர வேண்டும்



இதன்படி, விண்ணப்பதாரர், தாங்கள் புறப்படும் மாவட்ட நிர்வாகத்திடம், 'இ - பாஸ்' பெற்ற நிலை மாறி, சென்றடையும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோர வேண்டும். விண்ணப்பதாரர் செல்ல வேண்டிய மாவட்டத்தின் கலெக்டர் அனுமதி அளித்தால் மட்டுமே, 'இ - பாஸ்' கிடைக்கும்.இதுகுறித்து, மின்னாளுமை திட்ட அலுவலர்கள் கூறுகையில், 'விண்ணப்பதாரரின் மாவட்டம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, எந்த பட்டியலில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, 'இ - பாஸ்' வழங்கும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 100 சதவீதம் சரியான விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்படும்' என்றனர். -- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
16-மே-202013:06:52 IST Report Abuse
Ashanmugam இந்த இ பாஸ் திட்டத்தின் மூலம் மக்களை அதிக சிரமத்திற்கும், வேவர வெய்யிலில் வாட்டி வைக்கின்றனர். மேலும் ஆன் லைன் முறையும் தமிழக மக்களுக்கும், வெளிமாநிலத்தவருக்கும் பெருந்தலைவலியாக உள்ளது.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
16-மே-202008:15:15 IST Report Abuse
 Sri,India டாஸ்மாக் கடைக்கு எதும் பாஸ் தேவையா ஆபிசர் சார்?
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
16-மே-202006:29:09 IST Report Abuse
Nathan துட்டு அடிக்கவா, துள்ளி குதிக்கவா, கொரோனா குதிரையை, கட்டிவிட்டு தாண்டவா. க்ரிப்டோ அதிகாரம் செய்யுறத பாக்கவா. நாட்டு நடப்பெல்லாம், நார்த்ல தானாமாம், நம்ம பக்கமெல்லாம் பச்சையாக கைத்தவா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X