பொது செய்தி

இந்தியா

மல்லையா இந்தியா வருவதற்கு காரணமான அதிகாரி

Updated : மே 16, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
India, Vijay Mallya, UK Court, London High Court, Mallya, இந்தியா,மல்லையா,விஜய் மல்லையா

புதுடில்லி : வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, பிரிட்டனில் இருந்து, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார். இதற்கு, சட்ட ரீதியான பணிகளை மேற்கொண்ட, சி.பி.ஐ., கூடுதல் கமிஷனர் சுமன் குமாருக்கு, பாராட்டுகள் குவிகின்றன.

'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' உள்ளிட்ட, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர் விஜய் மல்லையா, வங்கிகளில் பெற்ற, 9,000 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல், 2016ம் ஆண்டு, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.சி.பி.ஐ., அதிகாரிகள் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளால், மல்லையாவை, இந்தியாவிற்கு நாடு கடத்த, லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil news




இந்த உத்தரவை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை, பிரிட்டன் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மல்லையாவை, 28 நாட்களுக்குள் நாடுகடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சட்ட போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர், சி.பி.ஐ.,யின் கூடுதல் கமிஷனர் சுமன் குமார், 55.

இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:மும்பையில், 2015ம் ஆண்டு, டி.எஸ்.பி.,யாக இருந்த சுமன் குமார், மல்லையா மீது, 9,000 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கு பதிவு செய்தார்.இதற்கிடையே, பிரிட்டன் தப்பி சென்ற அவரை மீட்டு வர, சுமன் குமார் நடத்திய மிகப்பெரிய சட்டப் போராட்டத்திற்கு, அப்போதைய சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா உறுதுணையாக இருந்தார்.அவர்கள், அமலாக்கத்துறை உதவியுடன், லண்டன் நீதிமன்றங்களில் நடந்த வழக்கு விசாரணைகளில், மல்லையா மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகளை உறுதி செய்தனர்.இதன் மூலம், மூன்றாண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால், விசாரணை அதிகாரி சுமன் குமாருக்கு, பாராட்டுகள் குவிகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


latest tamil news




ஜனாதிபதி விருது பெற்றவர்

சி.பி.ஐ.,யில், எஸ்.ஐ., ஆக, 23 வயதில் பணிக்கு சேர்ந்த சுமன் குமார், நிதி மோசடி உள்ளிட்ட குற்றங்களை கண்டுபிடித்ததற்காக, சிறந்த விசாரணை அதிகாரிக்கான தங்கப் பதக்கத்தை, 2004ல், அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங்கிடம் இருந்து பெற்றார்.சிறந்த சேவை புரிந்த போலீஸ் அதிகாரிக்கான பதக்கத்தை, 2008ல் வாங்கிய இவர், சிறந்த புலனாய்வு அதிகாரிக்கான விருதை, 2013ல் பெற்றார். இவரது பணிகளை பாராட்டி, 2015ல் ஜனாதிபதியின் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
19-மே-202019:56:19 IST Report Abuse
mohan எல்லாம் நாடகம்...ஒரு விவசாயீ தவணை கட்ட வில்லை என்றால், டிராக்டரை தூக்குகிறது வங்கி...வங்கி என்றால் எல்லோருக்கும் பொது வாக இருக்க வேண்டும்.. .. இவர்கள் வெளி நாட்டிலில் இருந்து கொண்டு...என்னத்த சொல்ல... எல்லாம் வீணா போன மக்களால். எல்லோரும் மது கடைகளின் முன் நின்றால், ஏமாற்றுபவர்கள் அதிகமாகி கொண்டுதான் போவார்கள்...
Rate this:
Cancel
Anandan P - Chennai,இந்தியா
19-மே-202012:26:45 IST Report Abuse
Anandan P உங்கள் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள் சார், இந்திய மக்களின் ஆதங்கத்தை தீர்த்துவைத்துள்ளீர்கள், பண மோசடி செய்து நாட்டை விட்டு ஓடும் மோசடிக்காரர்களுக்கு இது ஒரு முன் உதாரணம்.
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-மே-202021:23:06 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி நாமும் பாராட்டுவோம். பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X