புதுடில்லி : உத்தர பிரதேச சாலை விபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு : உத்தர பிரதேசத்தின் அவுரயியா என்ற இடத்தில் நடந்த சாலை விபத்து மிகவும் துயரமானது. மீட்பு பணிகளில் அரசு தீவிரமாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
उत्तर प्रदेश के औरैया में सड़क दुर्घटना बेहद ही दुखद है। सरकार राहत कार्य में तत्परता से जुटी है। इस हादसे में मारे गए लोगों के परिजनों के प्रति अपनी संवेदना प्रकट करता हूं, साथ ही घायलों के जल्द से जल्द स्वस्थ होने की कामना करता हूं।
— Narendra Modi (@narendramodi) May 16, 2020

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE