நேரடியாக பணம் வழங்குங்கள்: ராகுல்

Updated : மே 16, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (92)
Share
Advertisement

புதுடில்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிலையை பார்க்கும் போது எனது இதயம் கசிகிறது என காங்., மாஜி தலைவர் ராகுல் கவலை தெரிவித்துள்ளார்.latest tamil newsராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லாரியில் சென்றபோது உ.பி., மாநிலம் ஆரையா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக பிரதமர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்., மாஜி தலைவரும், எம்பியுமான ராகுல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்கள் அரசிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஏழை மக்களுக்கான நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மக்களுக்கு வழங்கும் நிதியை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். மக்களுக்கு இப்போது பணம்தான் தேவை.


latest tamil newsதேசிய ஊரக வேலை வழங்கும் திட்டத்தில் 200 நாளாக அதிகரிக்க வேண்டும் . விவசாயிகளுக்கு நேரடியாக பணம் பெறும் வகையில் செய்ய வேண்டும். இவர்கள் நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியவர்கள். எதிர்காலத்தை பற்றி பேசிக்கொண்டு நிகழ்காலத்தை மறக்க கூடாது.

சமீபத்தில் நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் அவலத்தை பார்க்கும் போது எனது இதயம் கசிகிறது. உபி.யில் தொழிலாளர்கள் பலர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். இவர்களுக்கான நிவாரணம் , பராமரிப்பு போதாது. அவர்களுக்கு மேலும் உதவிகள் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நாம் உதவி செய்யா விட்டால் நாட்டின் பொருளாதாரம் எழ முடியாது. நான் இந்த விவகாரத்தை அரசியலாக பார்க்கவில்லை. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
23-மே-202021:38:52 IST Report Abuse
Tamilnesan இவர் எப்போ வேலை வாங்கி தரும் புரோக்கர் ஆனார் ?
Rate this:
Cancel
MPK - Chennai,இந்தியா
17-மே-202014:32:29 IST Report Abuse
MPK இந்த மாதிரி ஒரு ஆள காங்கிரஸ் கட்சி தலைவரா தேர்ந்தெடுத்த காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு மக்குகளா இருப்பாங்க, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ள ஊரடங்கை அரசு அமல்படுத்திய போது, மக்கள் வேலையின்றி வறுமையில் வாடுகிறார்கள் என்று கூறினார், இப்பொழுது படிபடியாக ஊரடங்கு விலக்கப்பட்டு வரும் வேளையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள் எல்லாம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது, இச்சூழ்நிலையில் மக்கள் வங்கி கணக்கில் மத்திய அரசு இலவசமாக பணம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை விடுகிறார், இந்த கோமாளி, மக்களை தன் மனத்துடன் தன் உழைப்பில் வாழவிடாமல் சோம்பேரியாக்கி எப்போதும் இலவசமாக வரும் என்கிற மன நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார், தன்மானத்துடன் மக்களை வாழ விடவிடமாட்டார், தமிழ் நாட்டில் உள்ள அதே மனநிலையில் உள்ள சுடலை மற்றும் சில ஊடகங்கள் சில அரசியல் மற்றும் நடுநிலைகள் வக்காலத்து வேறு,
Rate this:
Cancel
Shake-sphere - India,இந்தியா
16-மே-202020:36:52 IST Report Abuse
 Shake-sphere அரசாங்கம் செலவு செய்யும் அவ்வளவு பணமும் வரி கொடுப்பவர்களுடையது அதனை அப்படியே தூக்கி இந்திய குடிகார பயல்களுக்கு தானமாக கொடுக்க சொல்லும் ராகுல் கானுக்கு அடிப்படை அறிவு என்பது எள்ளளவும் இல்லை
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-மே-202023:46:20 IST Report Abuse
தமிழ்வேல் அவர்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் (அது மதுவானாலும் சரி) gst செலுத்துகின்றார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X