சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

இவங்களை திருத்தவே முடியாது!

Added : மே 16, 2020
Share
Advertisement
 இவங்களை திருத்தவே முடியாது!

இவங்களை திருத்தவே முடியாது!

அரக்கோணம் முன்னாள், எம்.பி., அரி, தன் சொந்த செலவில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில், 5 கிலோ அரிசி, காய்கறி அடங்கிய, நிவாரண பொருட்களை, மக்களுக்கு வழங்கினார். அவருடன் சென்ற ஆதரவாளர்கள், நிவாரண பொருட்கள் வாங்குறவங்களிடம், 'வர்ற, சட்டசபை தேர்தல்ல, அரிக்கு ஓட்டு போடணும்...' எனக் கூறினர்.இதனால் ஆத்திரமடைந்த ஒருவர், 'நீங்க கொடுக்குறதுக்கு பேரு, 'நிவாரண பொருட்கள்' இல்லை... இப்பவே, ஓட்டுக்கு பணம் கொடுக்குற மாதிரி, அசிங்கமா நடந்துக்குறீங்க... இதுக்கு, நீங்க எதுவுமே கொடுக்காம இருந்திருக்கலாம்...' என, பொறிந்து தள்ளினார்.அருகிலிருந்தவர், 'எவ்வளவு சொன்னாலும், இந்த அரசியல்வாதிகளை திருத்தவே முடியாது' என, 'கமென்ட்' அடித்தார். இதை கண்டு கொள்ளாதது போல, அடுத்த வீட்டிற்கு ஓட்டு கேட்கச் சென்றனர்

'யாருமே அக்கறைப்படலியே!'

சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டையில், வட மாநில தொழிலாளர்கள், 1,800 பேர், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.அவர்களின் ஆவணங்களை போலீசார் சரிபார்த்தபோது, அவர்களை கூட்டமாக அமர வைத்திருந்தனர். உடல் வெப்பநிலை பரிசோதித்தபோதும், அதே கதை தான்.அதைக் கண்ட, நிருபர் ஒருவர், 'சமூக இடைவெளி பத்தி, யாருமே அக்கறைப்படலியே...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'இங்கிருந்து போறவங்க, எப்படி இருந்தா என்ன... தமிழகத்துக்குள்ள வர்றவங்களுக்கு மட்டும், தொற்று இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்களோ, என்னவோ...' என, வேதனைப்பட்டார்.

'போர்வையாளர்' கும்பலை காணோம்!

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான, கடலுார் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, சிதம்பரம், சப் - கலெக்டர் விசு மகாஜன் ஆகியோர், தங்களுடன் படித்த நண்பர்கள் உதவியுடன், 1.60 லட்சம் ரூபாய் செலவில், கடலுார் மாவட்ட மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளனர். அவர்களை, கலெக்டர் அன்புச்செல்வன் பாராட்டினார்.நிருபர் ஒருவர், 'அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் என, பலரும் மக்களுக்கு உதவி செய்றாங்க... ஆனால், இந்த தமிழின, 'போர்வையாளர்கள்' ஒருத்தரும், 1 ரூபாய் கூட கொடுக்கலையே... ஏன்?' என, கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த மற்றொரு நிருபர், 'அவங்களுக்கு, வாங்கித் தான் பழக்கம்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X