சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

துரோகம் செய்தால் அனுபவிக்க வேண்டும்

Updated : மே 16, 2020 | Added : மே 16, 2020
Share
Advertisement
 துரோகம் செய்தால் அனுபவிக்க வேண்டும்

துரோகம் செய்தால் அனுபவிக்க வேண்டும்

'பதவியில் இருக்கும் ஒவ்வொரு நாளுமே, முள் படுக்கையில் படுத்திருப்பது போன்ற உணர்வை தருகிறது.தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், முதல்வர் பதவியில் அமர்ந்ததால் இந்த கதி தான் ஏற்படும்' என, கண்ணீர் வடிக்கிறார், மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே. மஹாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்., கட்சிகளுடன் திடீர் கூட்டணி சேர்ந்து, ஆட்சி அமைத்தார் உத்தவ் தாக்கரே. இதற்காக, தங்களுடன் நீண்ட நாட்களாக நட்புடன் இருந்த, பா.ஜ., வின் உறவையும் முறித்தார். முதல்வர் பதவியில் அவரால் நிம்மதியாக அமர முடியவில்லை. கூட்டணி கட்சிகள், அவரது நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டை போட்டு வருகின்றன. கடந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே போட்டியிடவில்லை. இதனால், முதல்வர் பதவியில் நீடிக் வேண்டுமானால், எம்.எல்.சி.,யாக தேர்வு பெற வேண்டும் என்ற கட்டாயம், அவருக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி, இதற்கும் முட்டுக்கட்டை போட்டது. கூடுதல் வேட்பாளர்களை நிறுத்தி, கடைசி நிமிடம் வரை, உத்தவுக்கு தண்ணி காட்டியது. நீண்ட பேச்சுக்குப் பின், சமாதானம் அடைந்த காங்கிரஸ் பிரமுகர்கள்,உத்தவ், எம்.எல்.சி.,யக தேர்வு பெறுவதற்கு சம்மதித்தனர். இது குறித்து, பா.ஜ., பிரமுகர்கள், 'எங்களுக்கு செய்த துரோகத்துக்கு, உத்தவ் இப்போது அனுபவிக்கிறார்' என, கிண்டலடிக்கின்றனர்.

அனுதாப அலை வேலை செய்யுது!

'இழந்த செல்வாக்கை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கின்றனர். அதனால் தான், கொரோனா காலத்திலும் தீயாக வேலை செய்து வருகின்றனர்' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலையும், அவரது சகோதரி பிரியங்காவையும் பெருமையுடன் பேசுகின்றனர், உத்தர பிரதேச மாநில, காங்., நிர்வாகிகள். கடந்த லோக்சபா தேர்தலில், தங்கள் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான, உ.பி., மாநிலம் அமேதியில் தோல்வி அடைந்ததை, ராகுலால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இத்தனைக்கும், அவரது சகோதரி பிரியங்கா, அந்த தொகுதியில் முகாமிட்டு, சுற்றிச் சுற்றி வந்து பிரசாரம் செய்தார். ஆனாலும், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி தான், அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
நல்ல வேளையாக, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதால், ராகுலால், லோக்சபாவிற்குள் நுழைய முடிந்தது. அடுத்த தேர்தலிலும் அமேதியில் கோட்டை விட்டு விடக் கூடாது என்பதற்காக, இப்போதே வேலைகளை துவக்கியுள்ளார் ராகுல். அமேதி முழுதும், 70 ஆயிரம் முக கவசங்கள், 30 ஆயிரம் கிருமி நாசினி பாட்டில்கள், மளிகை பொருட்கள், உணவு பொருட்களை வீடு வீடாகச் சென்று விநியோகித்து வருகின்றனர், அமேதி தொகுதி, காங்., பிரமுகர்கள். இந்த வேலைகளை பிரியங்கா மேற்பார்வை செய்து வருகிறார். பொருட்களை கொடுக்கும்போது, 'உங்கள் இன்ப துன்பத்தில் எப்போதும் பங்கேற்கும் ராகுலை தோற்கடித்து விட்டீர்களே' என, மறக்கமால் மக்களிடம் கூறுகின்றனர். இந்த அனுதாப அலை நன்றாகவே வேலை செய்வதாக கூறுகின்றனர், காங்., பிரமுகர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X