டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 16, 2020 | கருத்துகள் (1)
Share
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி: கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறது என்பதற்காக, மாதக் கணக்கில், ஊரடங்கை நீட்டிப்பது சரியானதல்ல. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். செயற்கையான இந்த வைரஸ் தொற்றை ஒழிக்க, தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட வேண்டும். 'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஊரடங்கு தொடர் நீட்டிப்புக்கு எதிராக, மத்திய அமைச்சர்கள்
 'டவுட்' தனபாலு

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி: கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறது என்பதற்காக, மாதக் கணக்கில், ஊரடங்கை நீட்டிப்பது சரியானதல்ல. கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். செயற்கையான இந்த வைரஸ் தொற்றை ஒழிக்க, தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட வேண்டும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஊரடங்கு தொடர் நீட்டிப்புக்கு எதிராக, மத்திய அமைச்சர்கள் மத்தியில் கூட, எதிர்ப்பு இருக்கிறதோ என்ற, 'டவுட்' வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது போலவே, ஆய்வகத்தில் உருவான வைரஸ் இது; இதற்கு பின்னணி இருக்குமோ என்ற, 'டவுட்'டும் வலுக்கிறது!


பத்திரிகை செய்தி:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, மாணவர்களை தேர்வு கூடத்திற்கு அழைத்து வர, அரசு சார்பில், இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும். தேர்வு முடிந்த பிறகும், மாணவர்களை, அவரவர் வீடுகளில் சேர்க்கும் வகையிலும் பஸ்கள் இயக்கப்படும்.

'டவுட்' தனபாலு: மிகவும் சிரமமான, குளறுபடி இல்லாமல் நிறைவேற்றுவதற்கு கஷ்டமான இந்த பணியை, தமிழக அரசு எப்படி, சரியாக செய்யப் போகிறதோ என்ற, 'டவுட்' இப்போதே மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்பட்டு விட்டது. கல்வித்துறை நிலைப்பாட்டைப் பார்த்தால், ஜூன், 4க்கு பிறகும், தமிழகத்தில் மாமூல் நிலைமை வராதோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்து வருகிறது.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
திருமணம் சார்ந்த தொழில் செய்வோருக்கும், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும், சிறப்பு நிதி வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும். ஏனெனில், 50 நாட்களுக்கும் மேலாக, எவ்வித வருமானமும் இன்றி, இவர்கள் தவிக்கின்றனர்.

'டவுட்' தனபாலு: தொடர்ந்து, 50 நாட்களுக்கும் மேலாக, நாடு முழுவதும் ஊரடங்கு நீடிப்பதால், முடி திருத்தும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில், யாருக்கும், 'டவுட்' இருக்க முடியாது. அவர்கள் நிலை மிகவும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. சிறப்பு நிதி வழங்கி, பாதுகாப்பாக அவர்கள் தொழில் செய்ய, விதிமுறைகளை அரசுகள் வகுக்க வேண்டும் என்பது கட்டாயம்!lllதமிழக தலைமைச் செயலர் சண்முகம்:
தி.மு.க., - எம்.பி.,க்களிடம் நான் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. அவர்களிடம், 'எங்கள் சங்கடங்களை புரிந்து கொள்ள மாட்டீர்கள்; இது தான் உங்களிடம் உள்ள பிரச்னை' என்றேன். அதை அவர்கள் திரித்து கூறி, பிரச்னையை ஏற்படுத்தி விட்டனர். நான் சாதாரண அதிகாரி; அரசியல்வாதி இல்லை.
'டவுட்' தனபாலு: கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விட்டு விடக் கூடாது என நினைத்து, அரசியல் செய்து வரும், தி.மு.க., இந்த விவகாரத்தை சும்மா விடுமா... அதனால் தான், உரிமை மீறல், கடிதம் என, பெரிய அளவில், உங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு, தி.மு.க., தயாராகிறதோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.பொருளாதார வல்லுனர் சி.ரங்கராஜன்
: தமிழகத்தில் பொருளாதார பாதிப்பு எவ்வளவு ஏற்பட்டுள்ளது என்பதை, இப்போது கணக்கிட முடியாது. ஊரடங்கு முழுமையாக முடிந்த பின் தான் கணக்கிட முடியும். பொருளாதாரம், கீழே, மேலே போகக் கூடியது தான். இப்போது தான், முதல் முறையாக கூடி ஆலோசித்து உள்ளோம். விரைவில்மீண்டும் கூடுவோம்.

'டவுட்' தனபாலு: பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது என்பது, அனைத்து தரப்பினருக்கும், 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. அதை எப்படி மீட்டெடுக்கப் போகிறோம் என்பதற்காகத் தான், 24 பேர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தீர்க்கமான முடிவுகளை சொல்லுங்க!தமிழக நிதி அமைச்சரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம்:
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் விதத்தில், மத்திய அரசின் அறிவிப்புகள் உள்ளன. பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள், பொருளாதாரத்தை மீட்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

'டவுட்' தனபாலு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து மூன்றாவது நாளாக, பல சலுகைகளை அறிவித்துள்ளார். அவற்றை, நீங்கள் வெகுவாக பாராட்டியுள்ளீர்கள். நிதி அமைச்சர் என்பதால் தான், இந்த விவகாரங்களில், நீங்கள் தலையிடுகிறீர்கள். அதற்கும், தனக்கும் வெகு துாரம் என்ற நினைப்பில், முதல்வர், இ.பி.எஸ்., மவுனமாக உள்ளாரோ என்ற, 'டவுட்' வருகிறதே!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X