சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 16, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'டீக்கடைகளில் கூட்டம் சேரக் கூடாது என்பது ஒரு விஷயம்... டீயை உறிஞ்சும்போது டம்ப்ளரில் படும் எச்சிலை, முற்றிலுமாக, முறையாக நீக்கவில்லையெனில், அதே டம்ப்ளரை மற்றவர் பயன்படுத்தும்போது, அவர்களுக்கு தொற்று ஏற்படும் என்பது, முக்கியமான மற்றொரு விஷயம்... உங்கள் வசதி எப்படி?' என, கேட்கத் தோன்றும் வகையில், வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிக்கை: டீ கடைகளை திறக்க அனுமதித்துள்ள தமிழக அரசு, பார்சல் டீ அருந்த மட்டுமே அனுமதிக்கிறது. அதை மாற்ற வேண்டும். அதுபோல, டீ கடைகளை, இரவு, 9:00 மணி வரை திறந்திருக்கவும் அனுமதி அளிக்க வேண்டும்.


'கொரோனா பீதி அடங்கியதும், எல்லாம் சரியாகி விடும்; அதுவரை, போராட்டம் வேண்டாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், டி.ஆர்.இ.யு., ரயில்வே தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் இளங்கோ பேட்டி:
கொரோனாவை காரணம் காட்டி, ரயில் தொழிலாளர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எட்டு மணி நேர வேலை, 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதை எதிர்த்து தான் போராடுகிறோம்.'திடீரென, பத்து, இருபது பேர் அவரை சுற்றி நின்று, 'வீடியோ' எடுத்ததால், பயந்து போய் இருப்பார்...' என, கிண்
டலாக கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: 'கொரோனா நோய் தொற்று என்பது, மக்கள் பிரச்னை; அதை அரசு பார்த்துக் கொள்ளும்' என, தலைமைச் செயலர் சண்முகம், தி.மு.க., - எம்.பி.,க்களிடம் ஏளனமாக பேசியுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு, பதிலளிக்கும் கடமை, அவருக்கு உண்டு என்பதை மறந்து விட்டார்.


'உண்மையிலேயே அருமையான வாய்ப்பு தான். புத்தி இருப்போர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வர்...' என, சொல்லத் துாண்டும் வகையில், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேட்டி:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அருமையான திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தமிழக இளைஞர்கள் அதை பயன்படுத்தி, புதிய தொழில்களை துவக்கி, முன்னேற வேண்டும்.


'பாதுகாப்பு அரணைத் தாண்டியும், கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறதே...' என, பதில் சொல்லத் தோன்றும் வகையில், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி:
முதல்வர் இ.பி.எஸ்., மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், தொற்று அதிகமில்லா மாநிலமாகவும், பலி குறைவாக உள்ள மாநிலமாகவும், பரிசோதனைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாகவும், தமிழகம் உள்ளது. தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக, இ.பி.எஸ்., உள்ளார்.'இலங்கை பிரச்னை, மலேஷியா பிரச்னைன்னு, மத்த நாட்டு பிரச்னை தாங்க உங்க மண்டையில ஓடுது... அது சரி... உங்களைப் போன்ற, மற்ற கட்சிகளும், 'தலைவர்'களும், கொஞ்சம் உதவலாமே...' என, கேட்கத் துாண்
டும் விதத்தில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: மாலத்தீவு நாடு மற்றும் அந்தமான் பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை, தமிழகம் மீட்டு வர வேண்டிய பொறுப்பு, தமிழக அரசுக்கு உள்ளது. அங்குள்ள தமிழர்கள், பசியும், பட்டினியுமாக உள்ளனர்.'வெளிநாடுகளில் முடக்கப்பட்ட கறுப்பு பணத்தை நாட்டுக்கு எடுத்து வந்தால், ஒவ்வொருவருக்கும், 14 லட்சம் கொடுக்க முடியும் என, ஒரு பேச்சுக்குத் தான், மோடி கூறினார். அதை வைத்து, ஆறு ஆண்டுகளாக அரசியல் செய்கிறீர்களா...' என, மடக்கத் துாண்டும் வகையில், காங்கிரசை சேர்ந்த, நடிகை குஷ்பு அறிக்கை:
கடந்த, 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும், 15 லட்ச ரூபாய் போடப்படும் என தெரிவித்த மோடி, இன்னமும் அதை செய்யவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில், அந்த பணத்தை, பிரதமர் செலுத்தினால், மிக்க உதவிகரமாக இருக்குமே!


'விருது வாங்க வருவோருக்கு, பஸ், ரயில் வசதி வேண்டாமா; அதனால் தான், விருது அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டிருக்கும்...' என, கிண்டலாக பதிலடி கொடுக்கத் துாண்டும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:
தமிழ், தமிழர், தமிழகம் என்றாலே, புறக்கணிப்பு நிலை தான் இப்போது உள்ளது. ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய, செம்மொழி தமிழ் விருது, இதுவரை வழங்கப்படவில்லை. தமிழக அரசும், இதுபற்றி கண்டுகொள்ளாமல் உள்ளது.'இப்படித் தான் இருக்க வேண்டும், பிரபலங்களின் புதல்வர்கள்...' என, பாராட்டத் துாண்டும் வகையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் அறிக்கை:
என் தந்தை, 2001ல், முதல்வரானதும், என்னையும், என் சகோதரரையும் அழைத்து, 'உங்களால் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது' என கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, 20 வருடங்களாக அதை கட்டிக் காப்பாற்றி வருகிறோம்.'ஒரு குட்டி, யூனியன் பிரதேசத்திற்கே, இந்த நிலையா...' என, கவலை தெரிவிக்கத் துாண்டும் வகையில், புதுச்சேரி முதல்வர், காங்கிரசை சேர்ந்த, நாராயணசாமி பேட்டி:
மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்பதற்காக, மாநில அரசு போராடிக் கொண்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X