சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்காத அழகிரி

Added : மே 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்காத அழகிரி

ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்காத அழகிரி

நாயர் டீக்கடையில் இருந்து, வாளியில், 'பார்சல்' டீ வாங்கி வந்த அந்தோணிசாமி, ''ம்... இன்னையோட, மூணாம் கட்ட ஊரடங்கு முடியுதுங்க...'' என்றபடியே, திண்ணையில் அமர்ந்திருந்த நண்பர்களுக்கு, அதை பகிர்ந்து கொடுத்தார்.டீயை உறிஞ்சியபடியே,
''எட்டு மணி நேரத்துல, 44 ஆயிரம், 'லைக்' விழுந்துச்சாம் பா..'' என, முதல் தகவலுக்கு வந்தார், அன்வர்பாய்.''என்னன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''நடிகரு ரஜினி, 'டாஸ்மாக் கடையை திறந்தா, மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துடணு'முன்னு, சமூகவலைதளமான, 'டுவிட்டருல' பதிவு போட்டாரு... அதுக்கு தான், இவ்வளவு பேரு, லைக் போட்டுருக்காங்க பா...''சமூக வலைதளங்களுல, ரஜினிக்கு கிடைத்த ஆதரவு மாதிரி, வேற எந்த அரசியல்வாதிக்கும் இல்லைன்னு, அவரோட ரசிகர்கள் பெருமைப்படுறாங்க பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.
''சினிமாவுல இவரு சிகரெட், சரக்கு அடிக்கிற மாதிரி, நடிக்காம இருந்திருந்தா... பல பேருக்கு, அந்த பழக்கம் வந்துருக்காதுங்க...'' என, 'கமென்ட்' அடித்தார், அந்தோணிசாமி.''நானும், ரஜினியோட டுவிட்டர் சம்பந்தமா, ஒரு தகவல் சொல்றேன் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''என்ன பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியோட மகனும்,
'மாஜி' மத்திய அமைச்சருமான அழகிரி, நடிகர் ரஜினியோட டுவிட்டர் பதிவை ஆதரிப்பது போல், கருத்து வெளியானது ஓய்...''இதைப் பத்தி, அழகிரியோட மகன் தயாநிதி, அவர்கிட்டே சொல்லிருக்கார்... அதிர்ச்சியானவர், தனக்கு எந்த சமூக வலைதளத்துலையும் கணக்கு இல்லை... வேற யாரோ, இந்த வேலைய செஞ்சுருக்கான்னு, போலீசுல புகார் பண்ணிருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''மார்க்கெட் விஷயத்துல, 'ஆட்டை' போட நினைச்சது, முடியாம போச்சுதேன்னு, புலம்புதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''என்னங்க சொல்லுறீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கொரோனா பரவல் காரணமா, சென்னை, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை சமீபத்துல மூடினாவ... அதனால, திருமழிசையில மார்க்கெட் அமைக்குற டெண்டர்ல,
'ஒரு அள்ளு' அள்ளிடலாமுன்னு, அதிகாரிகள் ஆவலா இருந்தாவ வே.
..''எப்படியெல்லாம் ஆட்டைய போடலாமுன்னு, அங்காடி நிர்வாக குழுவுல இருக்கற, சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவு அதிகாரிகள், பல திட்டங்கள் போட்டு வச்சிருந்தாவ வே...''ரெண்டு நாள்ல, 200 தற்காலிக கடைகள் அமைக்கற வேலைக்கு, சரியான ஆள் கிடைக்காததால, அதிகாரிகள் திணறிட்டாவ... திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டும், வேலை முடியலை... கடைசியில, முதல்வரோட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இறங்கி, அந்த வேலைய முடிச்சாவ வே..
.''இதனால, ஒரு பெரிய டெண்டரை கையாள்ற வாய்ப்ப போச்சுன்னு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் புலம்பிக்கிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அந்தோணிசாமி, தன் மொபைல்போனில், எப்.எம்., 'ஆன்' செய்தார். 'ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே...' பாடல் ஒலிக்க, நண்பர்கள் சிரித்தபடியே நடையைக் கட்டினர்.

மணல் கடத்தல் சாவை மறைத்த போலீசார்!

''மக்களிடம், 'பெயில் மார்க்' வாங்குனாலும், தலைவர்கிட்ட, 'பாஸ் மார்க்' வாங்கிட்டாருல்லா...'' என, குப்பண்ணா வீட்டு திண்ணையில் அமர்ந்தார், பெரியசாமி
அண்ணாச்சி.
''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில, ஆறு முறை ஜெயிச்சவர், தி.மு.க.,வைச் சேர்ந்த பழனி மாணிக்கம்... தொகுதிக்குள்ள நடக்குற நல்லது, கெட்டதுகள்ல, தவறாம கலந்துக்குவாரு வே...
''எம்.பி., தொகுதி நிதியில இருந்து, கொரோனா தடுப்பு பணிக்கு, 5 கோடி ரூபாயை குடுத்தவர், கொரோனா நிவாரண பணிகள்ல தலையை காட்டாம முடங்கிட்டாரு... 'எம்.பி.,யை காணலையே'ன்னு பொதுமக்கள் தேடிட்டு இருக்காவ...
''அதே நேரம், ஸ்டாலின் நடத்திய வீடியோ கால் சந்திப்பு, டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவிச்சு, கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்கள்ல தவறாம கலந்துக்கிட்டு, அவரிடம் பாஸ் மார்க் வாங்கிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''அது சரி... நாளைக்கு தேர்தல்ல, தலைவரா வந்து ஓட்டு போடுவாரு... மக்கள் தானேங்க ஓட்டு போடணும்...'' எனச் சிரித்த அந்தோணிசாமி, ''கொரோனா இலவச அரிசியையும் கடத்துறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''எங்க ஓய் இந்த அநியாயம்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''மதுரை பாண்டியன் சூப்பர் மார்க்கெட்டுக்கு சொந்தமா, சோழவந்தான் தெற்கு ரத வீதியில, ரேஷன் கடை இருக்கு... இந்தக் கடையில, கொரோனா இலவச ரேஷன் பொருட்களை, யாருக்கும் ஒழுங்கா
வழங்கலைங்க...
''எப்ப போய் கேட்டாலும், காலியாகிடுச்சுன்னு, அங்க இருந்த பெண் விற்பனையாளர் சொல்லியிருக்காங்க... இதனால, அந்தப் பகுதி வாலிபர்கள் கொதிச்சு போயிட்டாங்க...
''சமீபத்துல, அந்தக் கடையில இருந்து, மூணு மூட்டை பச்சரிசியை, ஒருத்தர் பைக்குல கடத்திட்டு போறப்ப, கையும், களவுமா பிடிச்சு, கலெக்டர் வினயிடம் ஒப்படைச்சிட்டாங்க...
''கலெக்டர் உத்தரவுப்படி, விற்பனையாளர் தேன்மொழியை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க... இந்த மாதிரி, அரிசி கடத்தல் சம்பவங்கள், தமிழகம் முழுக்க நிறைய இடத்துல நடக்குதுங்க...'' என்றார்,
அந்தோணிசாமி.''மணல் கடத்தல் சாவை மறைச்சிட்டாங்க பா...'' என, கடைசி தகவலை கையில் எடுத்த அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருச்சி, துறையூர் பக்கம், கண்ணணுாரைச் சேர்ந்தவர் நிகில்... இவர், மணல் கடத்தி, குண்டர் சட்டத்துல ஜெயிலுக்கு போயிட்டு, சமீபத்துல தான் வெளியே
வந்தாரு பா...''இவரது தம்பி அகில், சமீபத்துல, முசிறி பேரூர் அருகே ராசிபுரத்துல இருந்து, டிராக்டர்ல மணல் கடத்திட்டு வந்தார்... போலீசார் பிடிக்க வந்தப்ப, டிப்பரை கழற்றி விட்டுட்டு, டிராக்டரை மட்டும் வேகமா ஓட்டிட்டு போறப்ப, விபத்தாகி இறந்து போயிட்டாரு பா...
''இது வெளியில தெரிஞ்சா, தங்களுக்கு பிரச்னை ஆகும்னு, ஜம்புநாதபுரம் போலீசார் நினைச்சாங்க... அதனால, 'தண்ணீர் எடுக்க, டிராக்டர்ல போறப்ப விபத்துல சிக்கி இறந்துட்டார்'னு வழக்கு பதிவு பண்ணி, அதிகாரிகளுக்கு அல்வா குடுத்துட்டாங்க பா...'' என, முடித்தார்
அன்வர்பாய்.அரட்டை முடிய, திண்ணை காலியானது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-மே-202006:22:13 IST Report Abuse
D.Ambujavalli தொற்றுக்காலத்தில் பிடித்த வாகனங்களை மீட்க லஞ்சம், மக்களின் பசிக்காக கொடுக்கும் பொருள் கடத்தல், எந்த ஒழுக்கக்கேட்டை விட்டு வைத்தார்கள்? இப்படி சேர்ப்பதில் எவ்வளவு ஒட்டும்? அண்ணண் சேர்த்தான், ஆடும் மாடும், தம்பி வந்தான் தரைமட்டமாக்க என்று வாரிசுகளே சூறையாடி விடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X