பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் சர்வதேச உற்பத்தியில் புதிய மாற்றம்

Updated : மே 18, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
கொரோனாவால் சர்வதேச உற்பத்தியில் புதிய மாற்றம்

சீனாவில் உருவான, 'கொரோனா' தொற்று, உலகம் முழுதும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளதால், சீனாவில் இயங்கி வரும், பல நாட்டு தொழிற்சாலைகள், இந்தியாவுக்கு இடம் மாறும்; சீன பொருட்களை போலவே, இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு, உலக அரங்கில் பெரும் சந்தை விரிவடைய வாய்ப்பு உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த நல்வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ளுமா என்பதே, தொழில்துறையின் இன்றைய மிகப்பெரிய கேள்வியாக உருவாகி உள்ளது.கிழக்காசிய நாடான, சீனாவின், ஹுபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், உலக அளவில், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை குடித்துள்ளது; 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே, வீடுகளுக்குள் முடங்க செய்த இந்த கொடிய வைரசின் தாக்கத்தினால், சர்வதேச பொருளாதாரம், வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து உள்ளது. அமெரிக்கா, கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
மோதல் போக்குவைரஸ் பரவலை, சரியான நேரத்தில், சீனா கட்டுப்படுத்த தவறியதாக, அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே, கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, பல்வேறு நாடுகளும், சீனாவில் உள்ள தங்கள் தொழிற்சாலைகளை, வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய ஆலோசனை நடத்தி வருகின்றன.சீனாவில் உள்ள ஜப்பான் நாட்டு தொழிற்சாலைகளை, இடமாற்றம் செய்ய, ஜப்பான் அரசு, 1,500 கோடி ரூபாய், நிதி ஒதுக்கி உள்ளது. சீனாவில் இருந்து, பொருட்கள் இறக்குமதி செய்வதை தவிர்க்க, ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.டூல்ஸ் எனப்படும், பழுது நீக்கும் கருவிகள் உற்பத்தி தொழிற்சாலைகள், சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு இடம் மாற துவங்கி உள்ளன.பஞ்சாபில் மட்டும், 400க்கும் அதிகமான, பழுது நீக்கும் கருவி தயாரிப்பு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கருவிகள், 80 முதல், 85 சதவீதம் வரை, பஞ்சாபில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, இத்துறை இந்தியாவில் இன்னும் வேகமான வளர்ச்சி எடுக்கும்.மேலும், ரசாயனம், பொறியியல் பொருட்கள், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி துறைகளிலும் பலன்கள் எதிர்பார்க்கலாம் என, கூறப்படுகிறது.சீனாவில் இயங்கி வரும், ஆப்பிள் நிறுவன தொழிற்சாலைகளில், ஐந்தில் ஒரு பங்கு தொழிற்சாலைகளை, இந்தியாவுக்கு மாற்ற, ஆப்பிள் நிறுவனம், மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகிறது.


பல்வேறு திட்டங்கள்இந்த நிலைமையை நன்கு உணர்ந்துள்ள மத்திய அரசு, வெளிநாட்டு அரசுகள் மற்றும் முதலீட்டாளர்களை கவர்வதற்கு, பல்வேறு திட்டங்களை வகுக்க துவங்கி உள்ளது.சீனாவில் உற்பத்தியை மேற்கொண்டு வரும் அமெரிக்க நிறுவன தொழிற்சாலைகள், அங்கிருந்து இந்தியாவுக்கு இடம் மாறினால், பல்வேறு சலுகைகள் மற்றும் ஊக்க தொகைகள் தர தயாராக இருப்பதாக, 1,000 அமெரிக்க நிறுவனங்களை அணுகி, மத்திய அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.நம் நாட்டில் உள்ள வரி மற்றும் தொழிலாளர் சட்டங்களில், அமெரிக்க நிறுவனங்கள், எவ்வகையான மாற்றங்களை எதிர்பார்க்கின்றன என்பது குறித்து, அந்நாட்டு நிறுவனங்களிடம், மத்திய வர்த்தக அமைச்சகம் தரப்பில் இருந்து, விரிவான விபரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதன் ஒரு பகுதியாக தான், பா.ஜ., ஆளும் உ.பி., குஜராத் மற்றும் ம.பி.,யில், தொழிலாளர் நல சட்டத்தில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.

மேலும், தமிழகம், மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், தொழிற்சாலைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து, 15 ஆயிரம் ஹெக்டேர் நிலத்துடன், மேலும், இரண்டு லட்சத்து, 43 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை கண்டறியும் பணியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.மின்னணு, மருந்து, மருத்துவ உபகரணங்கள், மின் சாதனங்கள், உயர் பொறியியல், சூரிய சக்தி உபகரணங்கள், உணவு பதனிடுதல், ரசாயனம் மற்றும் ஜவுளி உற்பத்தி துறைகளில், வெளிநாட்டு தொழிற்சாலைகளுக்கு, மத்திய அரசு, உடனடியாக அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவில், தங்கள் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்து, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா உட்பட, மேலும் சில நாடுகள், மத்திய அரசுடன் பேச்சு நடத்தி இருப்பதாக, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சவால்கள் என்ன?இந்தியாவில் உற்பத்தி செலவு அதிகம். முதலீடு மற்றும் மின் கட்டண செலவும் அதிகம். இவை தவிர, வரி விதிப்பு, அதிகாரிகளின் தலையீடு என, பல்வேறு சிக்கல்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.இதன் காரணமாகவே, கடந்த ஐந்து ஆண்டுகளில், சீனாவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நிறுவனங்களில், மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்தன. மற்ற, 26 நிறுவனங்கள் வியட்நாமுக்கும், 11 நிறுவனங்கள் தைவானுக்கும், எட்டு நிறுவனங்கள் தாய்லாந்துக்கும் சென்றுவிட்டன.எனவே, முழு அடைப்பு முடிந்த பின், மத்திய அரசு, நம் வர்த்தக கொள்கைகளில் பல மாற்றங்களை செய்தால் மட்டுமே, சீனாவிடம் உள்ள தொழிற்சாலைகளை, இந்தியா பக்கம் கொண்டுவர முடியும் என, நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இரண்டாம் சீர்திருத்தத்துக்கு தயாராகும் இந்தியா!இந்தியாவில் இதுவரை நடைபெற்ற அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும், நெருக்கடி காலகட்டத்தில் நடந்தவை. அதற்கு நிறைய சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால், பொருளாதார சீர்திருத்தம், ஒருமுறை மட்டுமே நடந்துள்ளது. அது, பிரதமராக நரசிம்ம ராவும், நிதி அமைச்சராக மன்மோகன் சிங்கும் இருந்த போது, 1991ல், காங்கிரஸ் ஆட்சி காலத்தில், கொண்டு வரப்பட்டது. அது, இந்திய சந்தையின் வளர்ச்சியை உயர்த்தியது. இது நடந்து சரியாக, 30 ஆண்டுகள் கழித்து, கொரோனா என்ற கொடிய வைரஸ் வாயிலாக, வரலாறு காணாத மிகப் பெரிய நெருக்கடியை, உலகம் சந்தித்துள்ளது. நாட்டின் இரண்டாவது பொருளாதார சீர்திருத்தம் நடைபெறுவதற்கு உகந்த நேரம் இது, என்பதே, பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதை நிறைவேற்ற, அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது என்பதை, கடந்த சில நாட்களாக வெளியாகும் அறிவிப்புகள், நமக்கு உறுதி அளிக்கின்றன.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202007:03:42 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் கனவு காணலாம்.. பகல் கனவு கூடாது..
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-மே-202020:55:11 IST Report Abuse
Rajagopal நல்ல வேலையாக மோடி அரசு பதவியில் இருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்காக அவர்கள் கமிஷன் வாங்காமல், வெளி நட்டு வங்கியில் ஊழல் பணத்தை சேர்க்காமல், உண்மையாக பல ஏற்பாடுகளை செய்வார்கள். மற்றவர்கள் பதவியில் இருந்தால் இந்நேரம் நாட்டையே விற்றிருப்பார்கள். இந்த மாதிரி கால கட்டத்தில், ஊழலில் ஈடு படாத, நேர்மையான தலைவர்கள் தேவை. மற்ற நாடுகளுக்கு அந்த பாக்கியம் இல்லை. இந்திய மக்கள் இதை உணர வேண்டும். மோடி போன்ற தலைவர் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்திருந்தால் நம் நாடு என்றோ, மிகவும் பெரிய நிலையை அடைந்திருக்கும். சோசியலிஸ்டுகளிடம் மாட்டிக்கொண்டு வழி தவறிப் போய் விட்டது.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
17-மே-202015:33:34 IST Report Abuse
Loganathan Kuttuva இந்த அந்நிய நாட்டு தொழிலதிபர்கள் இந்தியாவில் இருந்த குளறுபடியான வரி விதிப்பினை மாற்றி உலகில் உள்ள பொது வரிமுறைக்கு திருத்தியமைக்கும்படி வேண்டினார்கள். அதனால் தான் முந்தய அரசு ஜி எஸ் டி முறைக்கு முயற்சித்தது. இப்பொழுது உள்ள அரசு அதை அமல் படுத்தியது. இதே போன்று மற்ற நல்ல மாற்றங்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X