பொது செய்தி

இந்தியா

விமான போக்குவரத்தை துவக்கினால் கொரோனா வேகமாக பரவும்

Updated : மே 18, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
விமான போக்குவரத்தை துவக்கினால் கொரோனா வேகமாக பரவும்

புதுடில்லி: 'தற்போதுள்ள சூழலில், இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்தை உடனடியாக துவக்குவது, கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு வழி வகுத்து விடும். உள்நாட்டுக்குள் விமான பயணம் மேற்கொள்ளும் பயணியர் மூலமாக, மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது' என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்காசிய நாடான இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலையின் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரத் துறையை நிபுணர்கள், விமான போக்குவரத்தால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.இதில், பல்வேறு நாடுகளில் உள்ள விமான நிலையங்கள், அந்த நகரங்களில் உள்ள மக்கள் தொகை அடர்த்தி ஆகியவற்றை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் முடிவுகளை அறிவித்துள்ளனர்; அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு விமான போக்குவரத்தை துவக்குவது, பெரும் ஆபத்துக்கு வழி வகுக்கும், மக்கள் தொகை அடர்த்தி, அடிக்கடி மேற்கொள்ளப்படும் உள்நாட்டு பயணங்கள் ஆகியவை, கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்கும்.

உலகம் முழுவதும், 1,364 விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில் பயணியர் வருகை, புறப்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில், சீனாவின் பீஜிங் நகரில் உள்ள விமான நிலையத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் பயணங்கள், அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இரண்டாவதாக, ஹாங்காங் விமான நிலையமும், மூன்றாவதாக, சிங்கப்பூர் விமான நிலையமும் அதிக ஆபத்தை ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கும். அதிக ஆபத்து ஏற்படும் விமான நிலையங்களுக்கான பட்டியலில், டில்லி நான்காவது இடத்தில் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய விமான நிலையங்கள் வாயிலாக பயணம் செய்வோர் மூலமாக, மற்றவர்களுக்கு வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, சர்வதேச விமான போக்குவரத்தை விட, உள்நாட்டு விமான போக்குவரத்து மூலமாகத் தான், அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அலுவல் ரீதியாகவோ, சொந்த காரணமாகவோ, ஏராளமானோர் அடிக்கடி உள்நாட்டுக்குள் விமானங்களில் பயணம் மேற்கொள்வர். இவர்கள் மூலமாக, விமான பயணம் மேற்கொள்ளாத மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. கொரோனா பரவல் அதிகரித்த பின், ஐரோப்பிய நாடுகளில் விமான பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் மூலமாக, வைரஸ் பரவல், பெருமளவில் குறைந்துள்ளது.

விமான போக்குவரத்து துவக்கப்பட்டால், விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகள், கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கைள், பரிசோதனை முயற்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு எங்கே?

இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து உடனடியாக துவக்கப்பட்டால், எந்தெந்த விமான நிலையங்கள் மூலமாக வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பதை, டெல் அவிவ் பல்கலை வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள விமான நிலையங்கள்:
டில்லி,மும்பை,பெங்களூரு, சென்னை,ஐதராபாத், கோல்கட்டா, ஆமதாபாத்

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghavan.G - coimbatore,இந்தியா
17-மே-202018:18:16 IST Report Abuse
Raghavan.G Disinfectant both passenger and flight everytime ,then allow flight operation . it is not prudential not to operate the flight service after treading some report. From the report we have to learn and take necessary precaution, instead stopping operation is not logical.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
17-மே-202015:40:02 IST Report Abuse
Loganathan Kuttuva விமானத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் குரானா மருத்துவர்கள் அணியும் பிளாட்டிக் உடைகளை அணிந்து செல்ல அறிவுரை செய்யலாம்.பயணம் முடிந்த பின் அந்த ஆடைகளை அழித்துவிட வேண்டும்.
Rate this:
Cancel
Tamil - Trichy,இந்தியா
17-மே-202013:38:04 IST Report Abuse
Tamil விமான பயணம் கடும் சோதனைக்கு பின்புதான் அனுமதிக்கிறாரகள். கொரநா முடிந்த பின்புதான் விமான சேவை துவங்க வேண்டும் என்றால் இன்னும் மருந்து கண்டு பிடிக்காத நிலையில் மூன்று ஆண்டுகள் ஆகும். அதற்குள் அணைத்து விமான நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும். மருந்து கண்டு பிடிக்க துப்பில்லாதவர்கள் இது போன்ற ஆய்வு செய்து டாஸ்மாக் தீர்ப்பவர்களிடம் கொடுக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X