பொருளாதார பாதிப்பில் இருந்து மீள சுயசார்பு சீர்திருத்த திட்டங்கள்

Updated : மே 18, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி : ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக வெளியிடப்பட்டு வரும் அறிவிப்புகள் வரிசையில், 'பல்வேறு துறைகள் சுயசார்புடன் இருக்கும் வகையில், அவற்றில் சீர்திருத்தங்கள் செய்யப்படும்' என, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறினார். அந்த வகையில், 'மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க, யூனியன் பிரதேசங்களில், மின் வினியோகம் தனியார்
பொருளாதார பாதிப்பில் இருந்து மீள சுயசார்பு சீர்திருத்த திட்டங்கள்

புதுடில்லி : ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக வெளியிடப்பட்டு வரும் அறிவிப்புகள் வரிசையில், 'பல்வேறு துறைகள் சுயசார்புடன் இருக்கும் வகையில், அவற்றில் சீர்திருத்தங்கள் செய்யப்படும்' என, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறினார்.

அந்த வகையில், 'மக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க, யூனியன் பிரதேசங்களில், மின் வினியோகம் தனியார் மயமாக்கப்படும்' என, அவர் அறிவித்தார்.அவர் கூறியதாவது:'மக்களிடம், நேரடியாக பணத்தைக் கொடுக்க வேண்டியது தானே' என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், மக்கள் சுயசார்புடன் இருப்பதை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு துறைகளுக்கு சலுகைகள், சீர்திருத்தங்களை அறிவித்துள்ளோம்.இந்த ஊரடங்கு காலத்தால், இந்தத் துறைகளில் இருந்த பல தடைகள், இடையூறுகள், சிக்கல் நீக்கப்பட்டுள்ளன. இனி, தொழில்கள் இயங்கத் துவங்கும்; அதன் மூலம் மக்களிடம் பணப் புழக்கம் ஏற்படும். அவர்களுடைய வாங்கும் சக்தி உயரும். ஒரே நேரத்தில், அனைத்து தரப்பினரும் சுயசார்பு பெறுவதே, இந்த
அறிவிப்புகளின் நோக்கம்.அந்த வகையில், நிலக்கரி, ராணுவம், விமானப் போக்குவரத்து உட்பட, எட்டு துறைகளில், பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சீர்திருத்தங்கள் மூலம், புதிய வளர்ச்சிக்கான வாய்ப்பு, இதுவரை கிடைக்காத முதலீடுகள், உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவற்றுடன், வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உருவாகும்.


1.நிலக்கரி சுரங்கம்* நிலக்கரி சுரங்கத் துறையில், அரசு மட்டுமே செயல்பட்டு வந்தது மாற்றியமைக்கப்படுகிறது. இனி வர்த்தக ரீதியில், வருவாயை பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில், தனியாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். முதலில், 50 சுரங்கங்கள் ஏலம் விடப்படும்
* நிலக்கரியை கொண்டு செல்வதற்காக, 50 ஆயிரம் கோடி ரூபாயில் வசதிகள் செய்யப்படும்
* சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், நிலக்கரியில் இருந்து, 'காஸ்' தயாரிப்பது, மீத்தேன் பிரித்தெடுப்பது போன்றவை ஊக்குவிக்கப்படும். இதற்காக வருவாயை பகிர்ந்து கொள்ளும் விகிதத்தில் சலுகை அளிக்கப்படும்


2.தாதுப் பொருட்கள்* சுரங்க ஒதுக்கீடு ஒருவருக்கும், அதில், வெட்டி எடுக்கப்படுவது ஒருவருக்கும், பின் அதில் இருந்து பொருட்களை பிரித்தெடுப்பது ஒருவருக்கும் என, தனித்தனியாக செயல்படுத்தப்பட்டன. தற்போது, இது மாற்றப்படுகிறது. அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, 500 சுரங்கங்களில் செயல்படுத்தப்படும்
* தாதுப் பொருட்கள் தொடர்பான அட்டவணை வெளியிடப்படும்
* சில சுரங்கங்களை பெற்றுள்ளவர்கள், பாதியில் அதை நிறுத்தி விடுகின்றனர். அதில் உள்ள பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த விரும்பினால், அதை மறு குத்தகைக்கு விடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்
* சுரங்கங்கள் பதிவுக்கான, பத்திரப் பதிவு நடைமுறை ஒழுங்குபடுத்தப்படும்


3.ராணுவ உற்பத்தி* சில குறிப்பிட்ட வகையான ஆயுதங்கள், தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் உள்ளது. அதை ஊக்குவிக்கும் வகையில், அவற்றுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பான பட்டியல் வெளியிடப்படும். அவை உள்நாட்டில் இருந்தே
வாங்கப்படும். உதிரி பாகங்களுக்கும் இது பொருந்தும்
* உள்நாட்டில் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு, தனி பட்ஜெட் ஒதுக்கப்படும்
* ஆயுத தொழிற்சாலை வாரியங்கள், வர்த்தகமயமாக்கப்படும்; தனியார் மயமாக்கப்படாது. இதன் மூலம், அவை சிறப்பாக செயல்பட முடியும், திறன் மேம்படும்.
பங்கு சந்தையிலும் அவை ஈடுபட முடியும்
* ஆயுதக் கொள்முதலுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும்
* இந்தத் துறையில், அன்னிய முதலீடு, 49 சதவீதத்தில் இருந்து, 74 சதவீதமாக உயர்த்தப்படும்


4.விமான போக்குவரத்து* இந்திய வான் எல்லையில், 60 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மற்றவை, ராணுவம் உள்ளிட்ட கட்டுப்பாடு பகுதியில் வருகின்றன.
இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதனால், பயண நேரம், எரிபொருள், விமானிக்கான இயக்க நேரம், பயணக் கட்டணம் குறையும். இதன் மூலம், இந்தத் துறையில், 1,000 கோடி ரூபாய் சேமிக்கப்படும்
* மேலும் ஆறு விமான நிலையங்கள் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே, 12 விமான நிலையங்கள், தனியார் வசம் உள்ளன. இதன் மூலம், இந்திய விமான நிலைய நிறுவனத்துக்கு 2,300 கோடி ரூபாய் கிடைக்கும். அதைத் தவிர, 13 ஆயிரம் கோடி கூடுதல் முதலீடுகளும் கிடைக்கும்
* எம்.ஆர்.ஓ., எனப்படும் விமானங்களின் பராமரிப்பு, பழுது நீக்கம் மற்றும் புதுப்பித்தலின் மையமாக இந்தியா மாற்றப்படும். தற்போது, இவற்றுக்காக வெளிநாடுகளை நம்பியே உள்ளோம்.
ராணுவ விமானங்களும் இந்த வசதியை பயன்படுத்தலாம். இதன் மூலம், மூன்று ஆண்டுகளில், விமானங்கள் பராமரிப்புக்கான செலவில், 2,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம்


5.மின் பகிர்மானம்* யூனியன் பிரதேசங்களில், மின் பகிர்மானம் தனியார் மயமாக்கப்படும்
* மின்கட்டண கொள்கை உருவாக்கப்படும். இதன் மூலம், நுகர்வோர் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.
மேலும், மின் பகிர்மான நிறுவனங்கள் உரிய நேரத்தில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான தொகையை செலுத்துவது கட்டாயமாக்கப்படும்.
நுகர்வோருக்கான மானியம் நேரடியாக செலுத்தப்படும். 'ஸ்மார்ட் பிரீபெய்டு மீட்டர்'கள் பொருத்தப்படும். 'டிஸ்காம்' எனப்படும் மின் பகிர்மான நிறுவனங்களுக்கான பிரச்னைகளால் நுகர்வோர் பாதிப்பது தவிர்க்கப்படும்


6.சமூக கட்டமைப்பு
* மருத்துவமனை உள்ளிட்ட சமூக கட்டமைப்பு திட்டங்கள், பொருளாதார ரீதியில் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் இருந்தாலும், நிதி ரீதியில் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. மக்களின் நலனுக்காக இது போன்ற திட்டங்களுக்கு, மத்திய அரசு, சிறப்பு திட்டத்தின் கீழ் நிதி அளித்து வருகிறது.
இதற்கான மத்திய அரசின் பங்கு, 20 சதவீதத்தில் இருந்து, 30 சதவீத மாக உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், 8,100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது


7.விண்வெளி* நாட்டுக்கு பெரிய பெருமையை, 'இஸ்ரோ' நிறுவனம் சேர்த்துள்ளது. இந்தத் துறையில், சில தனியார் நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால், சில கட்டுப்பாடுகளால், அவர்களால் செயல்பட முடியவில்லை.
இஸ்ரோவின் சோதனை வசதி உள்ளிட்டவற்றை, தனியார் பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள், இஸ்ரோவுடன் இணைந்து செயல்படலாம்
* சில, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், இந்தியாவுக்காக சில திட்டங்களை செயல்படுத்துகின்றன. அவை, புவி அமைப்பு தொடர்பான தகவல்களை, வெளிநாடுகளில் இருந்து பெறுகின்றன. நம் நாட்டை, சுயசார்புடன் இருக்க வழி ஏற்படுத்தும் வகையில், இந்தத் தகவல்களை, தகுந்த பாதுகாப்புடன் அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்


8.அணுசக்தி* புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும், 'ஐசோடோப்' போன்ற மருத்துவ தேவைக்காக, தனியாருடன் இணைந்து, ஆராய்ச்சி வசதிகள் அமைக்கப்படும்
* தனியாருடன் இணைந்து, கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தத் தொழில்நுட்பத்தில், விரைவில் அழுகக் கூடிய காய்கறிகள், பழங்களை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-மே-202000:49:11 IST Report Abuse
மதுரை விருமாண்டி எம்.ஆர்.ஓ., எனப்படும் விமானங்களின் பராமரிப்பு, பழுது நீக்கம் மற்றும் புதுப்பித்தல் - ஒன்றும் செய்யாமல் 40,000 கோடிக்கு M.R.O ஒப்பந்தம் அம்பானி பேருக்கு போட்டு ரபேல் விமானம் வாங்கலாம், அந்த MRO பணிகளை விஸ்தீரமான அனுபவமுள்ள HAL இடமிருந்து அதை பிடுங்குன்னு சொன்ன PMO வின் அடுத்த கட்ட கொள்ளை தான் இது. இந்த வசதியை ராணுவ விமானங்களும் பயன்படுத்தலாம், என்பதற்கு அர்த்தம் அது தான். அம்பானிக்கு இன்னொரு லட்சம் கோடி கடன் கொடுத்து மக்களிடமிருந்து சொட்டு சொட்டாக உறிஞ்சின பணத்தை மொத்தமாக கொடுத்து கட்சிக்கு கணிசமான கோடிகள் கள்ள கமிஷனாக கல்லா கட்டப்படும்.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-மே-202000:42:09 IST Report Abuse
மதுரை விருமாண்டி மேலும் ஆறு விமான நிலையங்கள் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே 12 விமான நிலையங்கள் தனியார் வசம் உள்ளன. - ஆதாயம் யாருக்கு? அதானி குழுமத்துக்கு தான். Cabinet nod for handing over 6 airports to Adani likely in July .. இதனால் திருவனந்தபுரம் விமானநிலைய பராமரிப்பு KSIDC (Kerala State Industrial Development Corporation Ltd.)- கேரளா அரசின் நிறுவனத்திடமிருந்து அதானிக்கு தாரை வார்க்கப்படுகிறது.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-மே-202000:34:07 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஆயுத தொழிற்சாலை வாரியங்கள், வர்த்தகமயமாக்கப்படும் தனியார் மயமாக்கப்படாது. உள்நாட்டில் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு, தனி பட்ஜெட் ஒதுக்கப்படும் - தனியார் மயமாக்கப்படாது , ஆனா அரசு துறைகளின் கழுத்தை நெறிச்சு தொங்க விட்டுடுவோம். தளவாடங்களை தனியார் தான் தயாரிப்பாங்க. அவங்க சொல்ற விலைக்கு வாங்கும் வெறும் கமிஷன் ஏஜெண்டாக மாற்றி அமைப்போம். கள்ளக்கமிஷன் கட்சி நிதி வசூல் பண்ணுவோம். அப்படியா அம்மிணி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X