சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவனை கடித்து குதறிய உயர் ரக நாய்

Updated : மே 17, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement

சென்னை: சென்னையில் உயர்ரக ரோட்வேலர் நாய் கடித்து குதறியதில் 9 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான்.latest tamil newsஆவடி அருகே மொறை பகுதியைச் சேர்ந்த எஸ்.விஷ்ணு (9) கடை வீதியில் நடந்து சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் வளர்த்து வரும் ரோட்வேலர் வெளிநாட்டு ரக நாய் சிறுவனை கடித்து குதறியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். நாய் பலமாக கடித்ததால் அவனுடை மண்டையோட்டு பகுதி பலத்த காயம் அடைந்திருந்தது.

ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ' வெளிநாடுகளில் இது போன்ற நாய்களை அழைத்துச் செல்லும் போதோ அல்லது சுதந்திரமாக விடும் போது வாய்க்கவசம் அணிவது வழக்கம். மேலும் அங்கு இந்த வகை நாய்கள் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், உரிமத்துடனும் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் இது போன்ற நாய்களை பாதுகாப்பற்ற முறையில் வளர்ப்பதால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது. சிறுவன், நாய் வளர்க்கப்பட்ட வீட்டின் அருகே சென்ற போது அவிழ்த்துவிடப்பட்டிருந்த நாய் தாவிக் குதித்து சிறுவனை கடித்து குதறி உள்ளது. நாய்க்குச் சொந்தக்காரர் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' இவ்வாறு போலீசார் கூறினர்.


latest tamil newsஎனினும் சிறுவன் உடல்நிலை சீராக இருப்பதாக தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - kailasa,இந்தியா
19-மே-202013:28:52 IST Report Abuse
Tamilan நாய்க்கு என்ன தண்டனை?
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
20-மே-202002:24:28 IST Report Abuse
naadodiஉரிமையாளர் பேரு குமாருங்க.....
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-மே-202021:34:44 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி நம்ம ஊரு புதுப் பணக்காரர்களுக்கு நாய் வளர்ப்பது ஒரு கவுரவமாக நினைக்கிறார்கள்.காலையில் பார்த்தால் இவர்களும் கிறுக்கர்களைப் போல அரைக்கால் டவுசருடன் ஒரு நாயை கயிறால் கட்டி கூட்டிச் செல்வார்கள். அது கண்ட இடங்களிலும் காக்கா போகும். அதை இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. இந்தக் கருமம் புடிச்ச நாயக் கட்டி மேய்ப்பதற்கு பதில் ஒரு ஆடோ மாடோ ஒண்ணைக் கூட்டிச் சென்று அப்படியே மேய்த்து வந்தால் வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு. சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்கும். ஏனெனில் ஆடு மாடுகளின் சாணங்கள் ஒரு கிருமி நாசினி. மேலும் அவை பயிர்களுக்கு நல்ல உரமும்கூட.
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) கொரோனாவை பரப்பியதற்கு சமமான குற்றம் இது... கடுமையான தண்டனை முறைகள் தேவை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X