வங்கி கணக்கில் பணம்: மத்திய அரசுக்கு ராகுல் கோரிக்கை

Updated : மே 18, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (54)
Share
Advertisement
வங்கி கணக்கில் பணம்: மத்திய அரசுக்கு ராகுல் கோரிக்கை

புதுடில்லி : ''கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்களை மாற்ற வேண்டும். ஏழைகளின் வங்கி கணக்கில் பணத்தை போடுங்கள்,'' என, மத்திய அரசுக்கு, காங்கிரஸ், எம்.பி., ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், ஊரடங்கால் வேலையை இழந்துள்ளனர். அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட, அவர்களுக்கு பணம் இல்லை. விவசாயிகளும் பெரும் அபாயத்தை சந்தித்து வருகின்றனர். சமீபத்தில், 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இவற்றில் பெரும்பாலான அறிவிப்புகள், கடன் கொடுப்பது தொடர்பானதாக உள்ளது.

ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உடனடியாக தேவையானது, பணம் தானே தவிர; கடன் அல்ல. எனவே, ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் வங்கி கணக்குகளில், உடனடியாக பணத்தை செலுத்துங்கள்; இல்லையெனில், அடுத்து வரும் நாட்களில் பேரழிவை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக அறிவித்துள்ள திட்டங்களை மாற்றி அமையுங்கள். ஏழைகளின் வங்கி கணக்கில், ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் செலுத்தும் திட்டத்தை, கடந்த லோக்சபா தேர்தலில், நாங்கள் வாக்குறுதி அளித்திருந்தோம். அதையாவது செயல்படுத்துங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
17-மே-202022:35:55 IST Report Abuse
mohankumar காச கொடுத்து டாஸ்மாக் ஸ்கூட்டர் என ஜாலியடித்து மக்கள் ஓரே மாதத்தில் தூள் பண்ணி .......அற்கு பதிலா மத்திய அரசு தொலை நோக்கு பார்வையில் செய்யும் இதுதான் நல்ல பலன் தரும் .
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
17-மே-202019:50:56 IST Report Abuse
Vena Suna சுவிஸ் வங்கியில் இவன் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து நம் நாட்டில் எல்லாருக்கும் கொடுக்கலாம்..
Rate this:
Cancel
jakku -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202019:28:43 IST Report Abuse
jakku கருத்து என்ற பெயரில் தரக்குறைவாக எவரையும் ஒருமையில் பேசவேணடாம்.ஏழைகளுக்கு வ ங்கி கணக்கில் பணம் போடச்சொல்வது அவருடைய கருத்து அதற்காக அவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை தவிர்க்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X