அரசியல் செய்தி

தமிழ்நாடு

கலெக்டரிடம் அழுத்தம் கொடுங்கள் : மா.செ.,க்களுக்கு உத்தரவு

Updated : மே 18, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
''மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, மாவட்ட செயலர்கள் அழுத்தம் தர வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசினார்.கொரோனா காலத்தில், நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து, மாவட்ட செயலர்களுடன், ஸ்டாலின், நேற்று, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஸ்டாலின் பேசியதாவது:அத்தியாவசிய உணவு பொருட்கள், நிதி உதவிகள், பசியை
கலெக்டர் அழுத்தம் கொடுங்கள் : மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

''மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, மாவட்ட செயலர்கள் அழுத்தம் தர வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசினார்.

கொரோனா காலத்தில், நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து, மாவட்ட செயலர்களுடன், ஸ்டாலின், நேற்று, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஸ்டாலின் பேசியதாவது:

அத்தியாவசிய உணவு பொருட்கள், நிதி உதவிகள், பசியை போக்கும் உணவு வகைகள் என, மக்கள் அவசியம் தேவையென எதிர்பார்க்கும் அனைத்தையும், அனைத்து மாவட்டங்களிலும், வழங்கியதாக, மாவட்ட செயலர்கள், ஊர் வாரியாக, நகர் வாரியாக, புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தனர்.எங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை, அரசு நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை ஆகியவற்றால் மட்டும் செய்ய முடிந்தவை. அரசு செய்ய வேண்டிய காரியங்களை மொத்தமாக தொகுத்து, சென்னையில் தலைமை செயலரிடம் கொடுத்துள்ளோம்.

மாவட்டச் செயலர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட கோரிக்கைகளை, மாவட்ட கலெக்டர்களிடம் கொடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை படிப்படியாக, அரசு நிர்வாகம் நிறைவேற்றித் தர வேண்டும் என, மாவட்டச் செயலர்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும், கொரோனா காலத்தில், எந்த அரசியல் கட்சியும், இந்தளவுக்கு செய்ததாக தகவல் இல்லை என்பதை பெருமையோடு பதிவு செய்கிறேன்.
ஒரு அரசும், பல ஆயிரம் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய வேண்டிய பெரிய செயலை, தி.மு.க., என்ற அரசியல் அமைப்பு செய்துள்ளது. நோய் தொற்று குறித்து கவலைப்படாமல், மக்கள் பணியாற்றிய, நிர்வாகிகளின் தொண்டுள்ளத்துக்கு நான் தலை வணங்குகிறேன்; களப்பணிகள் தொடரும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார். - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-மே-202005:30:45 IST Report Abuse
meenakshisundaram இவங்களுக்கு தெரிந்த சில வார்த்தைகளில் ஒன்று -அழுத்தம் கொடுப்பது?மேலும் சில ,'வாழ்வாதாரம்,உரிமை(இலவசம் எல்லாமே)சமூக நீதி ,ஐயோ கொல்றானுவளே வசனத்தை மாத்துங்கய்யா
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
18-மே-202020:18:35 IST Report Abuse
M Selvaraaj Prabu ஏம்ப்பா சுடலை, தமிழை கொல்லுற?
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
17-மே-202019:44:59 IST Report Abuse
Tamilselvan தீய சக்திகள் மிக பெரியதாக கொல்லை அடிக்க திட்டம் தீட்டுகிறது . அதன் முதல் படி தான் முன்னூறு கோடி கொடுத்து பிரசாந்தை வேலைக்கு வைத்து உள்ளனர். அதிகாரிகளை பனி செய்ய விடாமல் குழப்பம் உண்டாக்கி கொண்டு இருக்கின்றனர். மக்கள் இந்த தா குழப்பவாதிகளை விரட்டி அடிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X