கலெக்டரிடம் அழுத்தம் கொடுங்கள் : மா.செ.,க்களுக்கு உத்தரவு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கலெக்டரிடம் அழுத்தம் கொடுங்கள் : மா.செ.,க்களுக்கு உத்தரவு

Updated : மே 18, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (49)
Share
கலெக்டர் அழுத்தம் கொடுங்கள் : மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

''மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, மாவட்ட செயலர்கள் அழுத்தம் தர வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசினார்.

கொரோனா காலத்தில், நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்டது குறித்து, மாவட்ட செயலர்களுடன், ஸ்டாலின், நேற்று, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஸ்டாலின் பேசியதாவது:

அத்தியாவசிய உணவு பொருட்கள், நிதி உதவிகள், பசியை போக்கும் உணவு வகைகள் என, மக்கள் அவசியம் தேவையென எதிர்பார்க்கும் அனைத்தையும், அனைத்து மாவட்டங்களிலும், வழங்கியதாக, மாவட்ட செயலர்கள், ஊர் வாரியாக, நகர் வாரியாக, புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தனர்.எங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை, அரசு நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை ஆகியவற்றால் மட்டும் செய்ய முடிந்தவை. அரசு செய்ய வேண்டிய காரியங்களை மொத்தமாக தொகுத்து, சென்னையில் தலைமை செயலரிடம் கொடுத்துள்ளோம்.

மாவட்டச் செயலர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட கோரிக்கைகளை, மாவட்ட கலெக்டர்களிடம் கொடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை படிப்படியாக, அரசு நிர்வாகம் நிறைவேற்றித் தர வேண்டும் என, மாவட்டச் செயலர்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும், கொரோனா காலத்தில், எந்த அரசியல் கட்சியும், இந்தளவுக்கு செய்ததாக தகவல் இல்லை என்பதை பெருமையோடு பதிவு செய்கிறேன்.
ஒரு அரசும், பல ஆயிரம் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய வேண்டிய பெரிய செயலை, தி.மு.க., என்ற அரசியல் அமைப்பு செய்துள்ளது. நோய் தொற்று குறித்து கவலைப்படாமல், மக்கள் பணியாற்றிய, நிர்வாகிகளின் தொண்டுள்ளத்துக்கு நான் தலை வணங்குகிறேன்; களப்பணிகள் தொடரும்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார். - நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X