பிரசவ மருத்துவர் விடுப்பு கர்ப்பிணிகள் தவிப்பு

Added : மே 16, 2020
Share
Advertisement

திருத்தணி : அரசு மருத்துவமனையில், பிரசவ மருத்துவர் விடுப்பில் சென்றதால், பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணிகள், சென்னை, திருவள்ளூருக்கு அனுப்பி வைப்பதால், கடும் சிரமப்படுகின்றனர்.

திருத்தணி அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளி பிரிவு மற்றும் பிரசவ வார்டு ஆகியவை உள்ளன.இந்நிலையில், பிரசவ வார்டில் பணிபுரியும், இரு பெண் மருத்துவர்களில், ஒருவர் சுழற்சி முறையில் ஓய்வில் உள்ளார்.மற்றொரு பெண் மருத்துவர் நேற்று முன்தினம் முதல், பத்து நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். இதனால், பிரசவ வார்டில் உள்ள, 14 கர்ப்பிணிகள் கடும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், மூன்று நிறைமாத கர்ப்பிணிகள், மருத்துவர் இல்லாததால், பிரசவத்திற்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், ஒன்பது கர்ப்பிணிகள் வாடகை வேன் மூலம், சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

திருத்தணி வட்டார அரசு பொது மருத்துவமனையில், பிரசவ மருத்துவர் பணியில் இல்லாததால், கர்ப்பிணிகள் நிலை பரிதாபமாக உள்ளது.எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மருத்துவரை நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X