சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : மே 16, 2020
Share
Advertisement

சூதாட்டம் ஆடிய நால்வர் கைது

திருத்தணி: திருத்தணி அடுத்த, ஏ.எம்.பேட்டை பகுதியில், சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி போலீசார் மேற்கண்ட இடத்தில் திடீர் சோதனை நடத்திய போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடிய அதே பகுதியைச் சேர்ந்த, 27 - 38 வயதுடைய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

3 வாகனங்கள் பறிமுதல்

கனகம்மாசத்திரம் அடுத்த, நெமிலி பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், அரசு அனுமதியின்றி, மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார், மேற்கண்ட ஆற்றில் சோதனை செய்த போது, அரசு அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டிருந்த ஆம்னி வேன் மற்றும் ஸ்பிளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதே போல், திருவாலங்காடு அடுத்த, லட்சுமிவிலாசபுரம் பகுதியில் செல்லும் ஆற்றில், பல்சர் இருசக்கர வாகனத்தில், அரசு அனுமதியின்றி, மணல் அள்ளிக் கொண்டிருந்ததை திருவாலங்காடு போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X