பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும், 'டாஸ்மாக்' திறப்பு: அள்ளி சென்ற, 'குடி'மகன்கள்

Added : மே 16, 2020
Share
Advertisement
 மீண்டும், 'டாஸ்மாக்' திறப்பு: அள்ளி சென்ற, 'குடி'மகன்கள்

காஞ்சிபுரம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், நேற்று திறக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தின், 15 இடங்களில் திறக்கப்பட்ட கடைகளில், அதிகாலையிலேயே, 'குடி'மகன்கள் குவிந்தனர்; தேவைக்கு அதிகமாகவே மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.அரசு அறிவிப்புகளான,குடையுடன் வர வேண்டும், முக கவசம்கட்டாயம் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை, குடிமகன்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜன் மற்றும் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., தேன்மொழி ஆகியோர், நேற்று, டாஸ்மாக் கடைகளை பார்வையிட்டனர்.டி.ஐ.ஜி., தேன்மொழி கூறுகையில், ''ஒரு நாளைக்கு, 500 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படும். ''சமூக இடைவெளி, குடையுடன் வருவோருக்கு மட்டுமே மது வழங்கப்படும். பிற மாவட்டங்களில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு மது வாங்க வந்தால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,'' என்றார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில், 11 டாஸ்மாக் கடைகள் மட்டும், நேற்று திறக்கப்பட்டன.

சென்னை எல்லையோர, செங்கல்பட்டு மாவட்ட கடைகள், நேற்று திறக்கப்படாதது குறித்து, பத்திரிகையாளர்களிடம், போலீசார் தெரிவிக்காமல், அலட்சியப்படுத்தினர்.இதனால், மாமல்லபுரம், எலைட் டாஸ்மாக் கடை முன், சென்னை குடிமகன்கள் குவிந்தனர். காலை, 10:00 மணிக்கு, கடை பகுதி வந்த போலீசார், கடை திறக்கப்படாததாக தெரிவித்து, அக்கூட்டத்தை கலைத்தனர்.

உத்திரமேரூர்: கொரோனா பாதிப்பால், செங்கல்பட்டு கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தை ஒட்டியுள்ள பெருநகர் டாஸ்மாக் கடையும் திறக்கப்படவில்லை.உத்திரமேரூர் தாலுகாவில், மல்லியங்கரணை சாலையில் உள்ள, இரு டாஸ்மாக் கடைகள், நேற்று திறக்கப்பட்டன.இதனால், இரு மாவட்டங்களைச் சேர்ந்த குடிமகன்களும், உத்திரமேரூருக்கு படையெடுத்து, மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X