தமிழ்நாடு

மூன்று மாவட்டங்களில் 30 பேருக்கு கொரோனா

Added : மே 16, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 13 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் - ஏழு; பல்லாரம், திருக்கழுக்குன்றம் - தலா இரண்டு; செங்கல்பட்டு, செய்யூர் தாலுகா - தலா ஒன்று என, 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 470 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை, 517 ஆக பாதிப்பு இருந்தது.இந்த நிலையில், நேற்று, திருநின்றவூர் - நான்கு; ஆவடி - ஒன்று; பூந்தமல்லி - ஒன்று; திருவேற்காடு - இரண்டு; திருவள்ளூர் - இரண்டு, என, மொத்தம், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 527 ஆக உயர்ந்தது. இதில், 176 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது, 348 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர், நேற்று முன்தினம், 174 ஆக இருந்தது.நேற்று, புதிதாக, குன்றத்துார், மாங்காடு, சிங்கராயபுரம், சாலமங்கலம் பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேருக்கு, வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மாவட்டத்தில், மொத்தம் பாதிப்பு, 181 ஆக அதிகரித்துள்ளது.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X