போலீசாருக்கு இடையூறு வி.சி.க., நிர்வாகி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு இடையூறு வி.சி.க., நிர்வாகி கைது

Added : மே 16, 2020
Share

செங்கல்பட்டு: போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த, வி.சி.க., நிர்வாகியை, போலீசார் நேற்று, கைது செய்தனர்.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை, வில்லியம்பாக்கம் கிராமத்தில், டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த, 7ம் தேதி கடை திறக்கப்பட்டு, வியாபாரம் நடந்தது.அப்போது, வி.சி.க., வைச் சேர்ந்த அசோக்குமார், முருகன் ஆகியோர், மதுபாட்டில் வாங்க வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, செங்கல்பட்டு தாலுகா போலீசார், ரமேஷ், இளையராஜா ஆகியோர், வி.சி.க., நிர்வாகிகளை, வரிசையில் வரும்படி கூறினர்.

இதில், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின், அங்கிருந்த கடைகள் மீது, கல் வீசி சென்றதாகவும் கூறப்படுகிறது. தவிர, இச்சம்பவத்தை படம் பிடித்த, தனியார் தொலைக்காட்சி நிருபரையும், அவர்கள் தாக்கியதாக தெரிகிறது.இது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து, அசோக்குமார், 50, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X