பொது செய்தி

தமிழ்நாடு

மஹிந்திரா காரை, 'ஆன்லைன்' மூலம் வாங்கலாம்

Added : மே 16, 2020
Share
Advertisement

சென்னை, : மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., கார் வாங்கும் வாடிக்கையாளர்கள், எளிய முறையில் முன்பதிவு செய்ய, 'ஓன் ஆன்லைன்' திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு:மஹிந்திரா கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், காரின் விபரங்கள் மற்றும் வாங்கும் முறை குறித்து, ஆன்லைன் வழியாக, வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.இதற்காக, 'ஓன் ஆன்லைன்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதில், நான்கு வழிமுறைகளை பின்பற்றி, காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள், தங்களுக்கு பிடித்தமான, மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., காரை தேர்வு செய்ய வேண்டும். மேலும், டீலரை தேர்வு செய்யும் வசதியும், விலை விபரங்களையும் அறிய முடியும்.வழிகாட்டல் முறையில், சுயமதிப்பீட்டில் பழைய காரை மாற்ற முடியும். அதோடு, மஹிந்திரா, 'பர்ஸ்ட் சாய்ஸ்' வழங்கும் பழைய காருக்கான விலை மதிப்பை, ஆன்லைனில் பெற முடியும்.கடன் நிலையை கண்டறிவதுடன், வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் கடன் திட்டத்தை வடிவமைக்க முடியும். மேலும், நிதி நிறுவனத்தை தேர்வு செய்வதுடன், கடன் ஒப்புதல் கடிதத்தை பெற முடியும். அதோடு, காப்பீடு நிறுவனங்களிடம் இருந்து விபரங்கள் பெற முடியும்.

இது தொடர்பான உதவிக்கு, மஹிந்திரா ஆலோசகரை தொடர்பு கொள்ளலாம்.விருப்ப தேர்வை சரி பார்த்து, முன்பணத்தை செலுத்த வேண்டும். இந்த நான்கு வழிமுறைகளை பின்பற்றி, கார் முன்பதிவு செய்ய முடியும்.ஆவண பதிவு செயல்முறை நிறைவடைந்ததும், ஆலோசக மேலாளர், வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு, உரிய தகவலை தெரிவிப்பார்.

தொடர்ந்து, மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., கார் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு துாய்மையாக்கி, வீட்டு வாசலில் நிறுத்தப்படும்.மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., வாகனத்தை சொந்தமாக்க, இது ஒரு அரிய வாய்ப்பு.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X