எப்போதும் மாஸ்க் அணியும் இவாங்கா

Updated : மே 16, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

அமெரிக்க அதிபரின் மகளும் டிரம்பின் மூத்த ஆலோசகர்களில் ஒருவருமான இவாங்கா, அதிபரை சந்திக்கும் போதுமட்டுமல்லாமல் எப்போதும் மாஸ்க் அணிந்து கொள்கிறார்.



latest tamil news




இது குறித்து இவாங்கா கூறியதாவது:கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடந்த ஊழியர்களுக்கு நடந்த பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதிபர் டிரம்ப் உடன் இருக்கும் யாரும் மாஸ்க் அணியவில்லை. ஆனால், இந்த வாரம் தனது தந்தை டிரம்ப் உடன் இருக்கும் போதும் சரி மற்ற நேரங்களில் எப்போதும் தான் மாஸ்க் அணிவதாகவும், மேலும் அதிபர் டிரம்ப்பை சந்திக்க வருபவர்கள் அனைவரும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.அதிபர் டிரம்ப், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள் இருந்தபோதிலும், மாஸ்க் அணியவில்லை என்ற கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.


latest tamil news



ஏப்ரல் மாத தொடக்கத்தில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மாஸ்க் வழிகாட்டுதல்களை அறிவிக்கும் போது, ​​ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் மாஸ்க் அணிவதை விரும்பினார். அப்போது டிரம்ப் பேசியபோது, இது தன்னார்வமானது. நீங்கள் கட்டாயம் அதை செய்ய வேண்டியதில்லை. நான் இதை செய்யப்போகிறேன் என்று நான் நினைக்கவில்லை என்றார்.


மினசோட்டாவின் ரோசெஸ்டரில் உள்ள ஒரு மாயோ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பார்வையிடும்போது துணை அதிபர் மைக் பென்ஸ் மாஸ்க் அணியாமல் இருந்த காரணத்தால், பல சிக்கல்களை எதிர்கொண்டார்.
அதன் பின்னர், பென்ஸ் கூறுகையில், மாயோ மருத்துவமனை சென்றபோது "இது அவசியம் என்று நான் நினைக்கவில்லை, ஆனால், மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என ஒப்புக்கொண்டார். இவ்வாறு இவாங்கா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
17-மே-202007:39:42 IST Report Abuse
vbs manian அப்பா ஏன் அணிய மறுக்கிறார்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
17-மே-202004:46:23 IST Report Abuse
வெகுளி எங்க துண்டுசீட்டு இவான்காவை விட உஷாரு.... தனக்குத்தானே பேசும்போது கூட மாஸ்க்கு போட்டுக்கிட்டுதான் பேசுவாரு.... ஆனால் அல்லக்கைகளை மட்டும் கும்பல் கும்பலாக மனு குடுக்க அங்கயும் இங்கயும் அலையவிடுவாரு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X