சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று மூவர் உயிரிழப்பு

Added : மே 16, 2020
Share
Advertisement

பல்லாவரம் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, மூன்று பேர் உயிரிழந்தனர்.பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த, 60 வயது நபருக்கு, நேற்று முன்தினம், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், அவரது, உடல் நிலை மோசமானதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் இறந்தார். அவரது உடலை, சுகாதாரத் துறையினர், தகனம் செய்தனர்.அதேபோல், சேப்பாக்கத்தைச் சேர்ந்த, 55 வயது நபர், உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சில தினங்களுக்கு முன், ஓமந்துாரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு, கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார்.

மேலும், திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த, 63 வயது முதியவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த, 14ம் தேதி அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தன் முடிவில், நேற்று முன்தினம் அவருக்கு தொற்று உறுதியானது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X