சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்கள் மீது தடியடி; எண்ணுாரில் பரபரப்பு

Added : மே 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வடமாநில தொழிலாளர்கள் மீது தடியடி;  எண்ணுாரில் பரபரப்பு

எண்ணுார் :ரயிலுக்காக, சென்ட்ரல் நோக்கி நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள், திரும்பி செல்ல மறுத்து, போலீசாரை சூழ்ந்ததால், தடியடி நடத்தி விரட்டியடிக்கப்பட்டனர்

.ஊரடங்கால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த, வடமாநில தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்தனர்.ரயில், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல், பலர் முகாம்களில் முடங்கினர். சிலர், நாட்கணக்கில் நடந்தே, சொந்த ஊர் செல்ல முடிவெடுத்து பயணித்தனர்.

இதனிடையே, காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு புதுநகரில் தங்கி வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள், ரயிலுக்காக சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நடந்து செல்லும் சம்பவங்கள், அவ்வப்போது நடந்தேறின.சில நாட்களுக்கு முன், அத்திப்பட்டு புதுநகரில் இருந்து, சென்ட்ரல் நோக்கி தண்டவாளத்தில் நடந்தே சென்ற, 300 பேரை, எண்ணுார் போலீசார் தடுத்து நிறுத்தி, லாரிகள் மூலம் திருப்பி அனுப்பி வைத்தனர்.நேற்று காலை, மீஞ்சூர் - காட்டுப்பள்ளியில் இருந்து, எண்ணுார் முகத்துவாரம் மேம்பாலம் வழியாக, சென்ட்ரல் நோக்கி நடந்து செல்ல முயன்ற, 200க்கும் மேற்பட்ட, பீஹார் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை, தாழங்குப்பம் அருகே, எண்ணுார் போலீசார் மடக்கினர்.

முன்பதிவு மற்றும் அனுமதியின்றி, சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி பயணிக்கக் கூடாது. எனவே, அவரவர் குடியிருப்புக்கு செல்ல வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தினர்.வேலை இல்லை, உணவிற்கு அல்லல்படுகிறோம். எங்கள் சொந்த ஊர் செல்ல ரயிலுக்காக, சென்ட்ரல் நோக்கி நடந்தே செல்வோம் என கூறி, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.ஒரு கட்டத்தில், போலீசாரை சூழ்ந்த வடமாநில தொழிலாளர்கள் கோஷமிட்டனர். 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பலர் ஒன்று கூடி முழக்கமிட்டதால், அசாதாரண சூழல் நிலவியது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் தடியடி நடத்தி, அவர்களை, மேம்பாலம் வழியாக, விரட்டியடித்தனர். விழுந்து அடித்து ஓடியவர்கள், மேம்பாலம் வழியாக, மீண்டும் தங்கள் குடியிருப்பை நோக்கி சென்றனர்.தடியடி சம்பவத்தால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-202010:38:42 IST Report Abuse
joy பாவம்டா, வெறும் வயிற்றில் ஓடிக்கிட்டு இருக்காங்க, நீங்கள் வேற அதில் உங்கள் பூட்ஸ் கால்களால் மிதிக்காதீங்க.
Rate this:
Cancel
17-மே-202005:55:23 IST Report Abuse
ஆப்பு உடாதீங்க... அவிங்க சொந்த ஊருக்கு தப்பிச்சு போக உடாதீங்க. மத்திய அரசிடம் நிறைய புது தொழில் நுட்பம் வேற இருக்காம். அதையும் வாங்கி உபயோகிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X