சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் தியாகதுருகம் விவசாயிகள் கவலை

Added : மே 16, 2020
Share
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தியாகதுருகம் சுற்றுவட்டார பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் ஏரி குளங்களுக்கு நீர்வரத்து கிடைத்தது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நிலத்தடி நீர்

தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தியாகதுருகம் சுற்றுவட்டார பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் ஏரி குளங்களுக்கு நீர்வரத்து கிடைத்தது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணற்று பாசனம் கைகொடுத்தது. இது கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் நீர் நிலைகள் வறண்டது.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கரும்புக்கு போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது. கடந்த மாதம் இறுதியில் பெய்த கோடை மழை ஓரளவு கை கொடுத்த போதிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கரும்புகளின் சோலைகள் வாடிய நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X