எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

விவசாயம் செழிக்க..பொருளாதாரம் மீட்க. தேசம் காக்க! மக்கள் நல திட்டங்களின் தொகுப்பு

Updated : மே 16, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மீள, பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலானநலத்திட்டங்களை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் முக்கிய அம்சங்கள்: சிறு, குறு தொழில் நிறுவனங்கள்* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க, 3 லட்சம்
விவசாயம் செழிக்க... பொருளாதாரம் மீட்க... தேசம் காக்க!  மக்கள் நல திட்டங்களின் தொகுப்பு

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மீள, பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலானநலத்திட்டங்களை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


இதன் முக்கிய அம்சங்கள்:


சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி
* ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வரை வணிகம் செய்யும் நிறுவனங்கள், அக்., 31 வரை கடன் பெறலாம்.

45 லட்சம் நிறுவனங்கள் பலனடையும்

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்க, நிதியம் மற்றும் துணை நிதியங்கள் உருவாக்கப்படும்
* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் வழங்க, 45 ஆயிரம் கோடி ரூபாய்
* அடுத்த, 45 நாட்களில், சிறு, குறு நிறுவன தயாரிப்புகளை, 'இ - மார்க்கெட்' மூலம் விற்பனை செய்ய உதவி
* வங்கி சாராத மற்ற நிதி நிறுவனங்களுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் உதவி
* சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு, 10 கோடியில் இருந்து, 50 கோடி ரூபாயாக அதிகரிப்பு
* வாராக்கடன் பட்டியலில் உள்ள, சிறு, குறு நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன்
* நிதி நெருக்கடியில் சிக்கிய, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய்
* வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, அக்., 31 வரை கால அவகாசம்.

வெளிநாட்டு டெண்டருக்கு தடை

* இந்திய நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், 200 கோடி ரூபாய் வரையிலான, 'டெண்டர்'களில், வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க தடை.
மின்சார நிறுவனத்துக்கு உதவி
* மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனங்களுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி
* அரசு ஒப்பந்ததாரர்கள் பணிகளை முடிக்க, ஆறு மாதம் கூடுதல் அவகாசம்.


வருங்கால வைப்பு நிதி* வருங்கால வைப்பு நிதிக்காக, மத்திய அரசு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
அடுத்த மூன்று மாதங்களுக்கு, தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய, பி.எப்., தொகை, 12ல் இருந்து, 10 சதவீதமாக குறைப்பு. 100 ஊழியர்களுக்கு கீழ் உள்ள நிறுவனங்களில், பெரும்பாலானோர் மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினால், பி.எப்., தொகையை, ஜூன் - ஆகஸ்ட் வரை அரசே செலுத்தும்
* தொழிலாளர்களிடம் இருந்து, டி.டி.எஸ்., வரி பிடித்தம், அடுத்த ஆண்டு மார்ச் வரை, 25 சதவீதம் குறைப்பு. இதனால், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி செலுத்துவோர் பயன் அடைவர்.


விவசாயிகளுக்கு சலுகை* நாடு முழுதும், மூன்று கோடி விவசாயிகளுக்கு, குறைந்த வட்டியில் கடனுதவி; 25 லட்சம் விவசாயிகளுக்கு கடன் அட்டைகள்
வழங்கப்படும்
* விவசாயிகள் கடனுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
* கடன் பெறும் விவசாயிகள், முதல் மூன்று மாதங்கள் அதற்கான தவணை செலுத்த தேவையில்லை
* சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி, மே, 31 வரை தள்ளுபடி
* சாலையோர வியாபாரிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் துவக்க மூலதனத்துடன் கடன் வழங்கப்படும். 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க, 5,000 கோடி ரூபாய்
* விவசாயிகளுக்கு அவசர கூடுதல் மூலதன செலவுகளுக்கு, 'நபார்டு' மூலம், ௩௦ ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.


புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்* நகர்ப்புற ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்குமிட செலவுக்கு, மாநில அரசுகளுக்கு, பேரிடர் நிதியில் இருந்து, 11 ஆயிரத்து, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* அடுத்த இரு மாதங்களுக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு, 3,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* நகர்ப்புற ஏழைகளுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு


வேலைவாய்ப்பு* வேலைவாய்ப்புக்காக, கடந்த இரண்டு மாதங்களில், புதிதாக, 7,200 பெண்கள் சுய உதவி குழுக்கள் துவக்கப்பட்டன
* ஊரக கட்டமைப்பை மேம்படுத்த, 4,200 கோடி ரூபாய்
* ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம், 182ல் இருந்து, 202 ரூபாயாக உயர்வு
* குறைந்தபட்சம், 10 தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களில், இ.எஸ்.ஐ., திட்டம்
* ஐந்து ஆண்டுகளுக்கு பதில், ஒரு ஆண்டு பணி செய்தால், பணிக்கொடை தரப்படும்
* மலைவாழ், பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்கு, 6,000 கோடி ரூபாய்.


'முத்ரா' கடனுதவி* 'முத்ரா' திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான கடன் பெற்றவர்களுக்கு, ௨ சதவீதம் வட்டி குறைப்பு
* சிறு வணிகர்களுக்கு, முத்ரா திட்டத்தின் கீழ், 1.6 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்
* மலிவு விலை வீடு வாங்குவோருக்கான வட்டி மானியம், ஓராண்டுக்கு தொடரும்
* வீட்டுவசதி துறையை மேம்படுத்த, 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள். மலிவு விலை வீட்டுக்கு, வட்டி மானியம் அளிப்பதால், 2.5 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைவர்
* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, உரிய நேரத்தில் ஊதியம் அளிக்கப்படும். தற்போது, 30 சதவீத தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, 100
சதவீதமாக மாற்றப்படும்.

இரவு பணியில் பெண்கள்* உரிய பாதுகாப்பு வசதிகளுடன், பெண்களை இரவு பணியில்அனுமதிக்கலாம்.


ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு* 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் மூலம், வெளிமாநிலத் தொழிலாளர்கள், நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க அனுமதி
* வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு மலிவு வாடகை குடியிருப்பு ஏற்படுத்தி தரப்படும்.


விவசாயம், உணவு உற்பத்தி* விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க, 74 ஆயிரத்து, 300 கோடி ரூபாய்
* விவசாய கட்டமைப்பை மேம்படுத்த, 1 லட்சம் கோடி ரூபாய். இது உடனடியாக வங்கிகளில் செலுத்தப்படும்
* கூட்டுறவு சங்கங்கள், உற்பத்தி மையங்கள், விவசாய தொழில் முனைவோருக்கு நிதி
* கொள்முதல், குளிர்பதன கிடங்கை மேம்படுத்த, 1 லட்சம் கோடி ரூபாய்
* காய்கறி, பழங்களை சேமித்து வைக்கும் செலவுகளில், 50 சதவீதம் மானியம்
* குறு உணவு நிறுவனங்களை உருவாக்க, 10 ஆயிரம் கோடி ரூபாய்
* 'பீமயோஜனா' திட்டத்தில் விவசாயிகளுக்கு, 6,400 கோடி ரூபாய் கடன் தரப்பட்டது
* எளிதில் கெடும் பழம், காய்கறிகளை பதப்படுத்தி சந்தைக்கு கொண்டு செல்ல உதவி
* தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்திக்கு முன்னுரிமை.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
17-மே-202011:47:32 IST Report Abuse
J.Isaac திட்டம் தானே அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட வேண்டுமே.
Rate this:
Cancel
17-மே-202007:28:24 IST Report Abuse
ஆப்பு சோத்து மூட்டை தொழில்களுக்கு மட்டும் சுயச்சார்பு. பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதம் வரை அனுமதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X