வெளி மாநிலத்தவருக்கு முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெளி மாநிலத்தவருக்கு முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள்

Added : மே 16, 2020
Share
 வெளி மாநிலத்தவருக்கு முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள்

சென்னை : 'வெளி மாநிலத் தொழிலாளர்கள், தன்னிச் சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் வழியாகவோ செல்ல வேண்டாம்' என, முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அவரது அறிக்கை:வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் வந்து பணிபுரியும் தொழிலாளர்களை, அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அனுப்பி வைக்க, அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது.கடந்த, 6 முதல், நேற்று முன்தினம் வரை, 55 ஆயிரத்து, 473 வெளி மாநிலத் தொழிலாளர்கள், 43 ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தினமும், 10 ஆயிரம் பேரை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கான ரயில்வே கட்டணம் உட்பட, அனைத்து பயணச் செலவுகளையும், தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. எனவே, வெளி மாநிலத் தொழிலாளர்கள்,தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் வழியாகவோ செல்ல வேண்டாம்.தமிழக அரசு அனுப்பும் வரை, வெளி மாநிலத் தொழிலாளர்கள், தற்போது தங்கியிருக்கும் முகாம்களில் தொடர்ந்து இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X