அமெரிக்காவில் தாக்குதல் நடத்த சதி: பாகிஸ்தான் டாக்டர் மீது வழக்கு

Added : மே 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன் : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினருடன் சேர்ந்து, அமெரிக்காவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் மீது, அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகமத் மசூத், 28. டாக்டரான இவர், அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்காக, முறைப்படி, 'எச் - 1பி' விசா பெற்றுள்ளார். இவர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினருடன் சேர்ந்து, அமெரிக்காவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியது, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மார்ச்சில், அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், சிரியா நாட்டுக்குச் சென்று, ஐ.எஸ்., பயங்கரவாதிகளைச் சந்திக்க, இவர், விமான டிக்கெட் எடுத்ததும், கொரோனா வைரஸ் பிரச்னையால், பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டதால், இவரால் திட்டமிட்டபடி சிரியாவுக்கு செல்ல முடிய வில்லை என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக, வாஷிங்டன் நீதிமன்றத்தில், முகமது மசூத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VTR - Chennai,இந்தியா
17-மே-202013:00:36 IST Report Abuse
VTR If proved, due punishment to be given
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X