உப்பூர் தொழிலாளர்கள் வாக்குவாதம்

Added : மே 16, 2020
Share
Advertisement

திருவாடானை:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளில் பீகார், ஓடிசா, உ.பி. உள்ளிட்ட பல மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

மே 13ல் 55 பேர் சொந்த மாநிலங்களை நோக்கிநடந்தே புறப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் அழைத்து சென்று தொண்டி சமுதாய கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.மூன்று நாட்களாகியும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நேற்று உப்பூர் அனல் மின்நிலைய அலுவலர்கள் சென்று அனல் மின் நிலையத்திற்கு திரும்புமாறு அழைத்தனர்.

இதற்கு மறுத்த தொழிலாளர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்ததால் தொண்டி போலீசார் சமரசம் செய்தனர்.அதனை தொடர்ந்து யாரும் தப்பி செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அனைவரையும் ரயிலில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X