சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முடி திருத்தும் தொழிலாளர் அனைவருக்கும் ரூ.2,000

Added : மே 16, 2020
Share
Advertisement

சென்னை : முடி திருத்துவோர் நல வாரிய உறுப்பினர்களுக்கு, இரண்டு தவணையாக, 2,000 ரூபாய் வழங்கியது போல், நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும், 2,000 ரூபாய் வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

முடி திருத்துவோர் நல வாரியத்தில், உறுப்பினர்களாக உள்ள, 14 ஆயிரத்து, 667 பேருக்கு, இரண்டு தவணைகளாக, தலா, 1,000 ரூபாய், உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில், முடி திருத்தும் தொழில் மேற்கொள்ள, மத்திய அரசின் வழிமுறைகள் இடம் அளிக்கவில்லை. இதனால், நல வாரியத்தில் பதிவு செய்யாதவர்களும், நிவாரண உதவி கோரினர்.

அதைத் தொடர்ந்து, முடி திருத்துவோர் நல வாரியத்தில், பதிவு செய்யாத தொழிலாளர் களுக்கும், 2,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை, வருவாய் நிர்வாக முதன்மை ஆணையர் வெளியிடுவார்.முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள, பதிவு பெறாத தொழிலாளர்கள், கிராமங்களில், கிராம நிர்வாக அலுவலர்கள்; பேரூராட்சி பகுதிகளில், நிர்வாக அலுவலர்கள்; நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், மண்டல அலுவலர்களிடம், மனு அளிக்க வேண்டும்.

அவற்றை ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்வர். கலெக்டர்கள், அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்குவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X