பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

Added : மே 16, 2020
Share
Advertisement
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பி.டி.ஓ., அலுவலக பஸ் நிறுத்தம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி தலைமை தாங்கினார். சிறுவந்தாடு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி, கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் கண்ணன், தெற்கு ஒன்றிய செயலர் ராமதாஸ் முன்னிலை

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பி.டி.ஓ., அலுவலக பஸ் நிறுத்தம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி தலைமை தாங்கினார். சிறுவந்தாடு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி, கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் கண்ணன், தெற்கு ஒன்றிய செயலர் ராமதாஸ் முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் கார்த்திகா பிரியதர்சினி வரவேற்றார்.அமைச்சர் சண்முகம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கண்டமங்கலம் பகுதி மின்துறை ஊழியர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளை வழங்கினார். தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.நிகழ்ச்சியில் பி.டி.ஓ.,க் கள் பிரபாகர், நடராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஏழுமலை, சவுரிராஜன், மதியழகன், முன்னாள் பி.டி.ஓ., பாண்டுரங்கன், சித்த மருத்துவர் டாக்டர் ேஹமலதா, சுகாதார ஆய்வாளர் முருகன், பகுதி சுகாதார செவிலியர் இந்திரா, மருந்தாளுனர் ஜெகதீஸ்வரி, கிராம செவிலியர் சீத்தாதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X