பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடி இன மக்களுக்குஎஸ்.பி., நிவாரணம் வழங்கல்

Added : மே 16, 2020
Share
Advertisement
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே கொரோனா நோய் தொற்று பாதித்த பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் ஊராட்சியில் தேங்காலிமேடு பகுதியில் 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த வாரம் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் முண்டியம்பாக்கம் அரசு

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே கொரோனா நோய் தொற்று பாதித்த பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் ஊராட்சியில் தேங்காலிமேடு பகுதியில் 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த வாரம் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.இதனால் இப்பகுதியில் காய்கறி வண்டிகள் வரத்து குறைந்தது. இதனையடுத்து எஸ்.பி ஜெயக்குமார்தலைமையில், டிஎஸ்.பி., நீதிராஜன் முன்னிலையில், இப்பகுதியில் வசிக்கும் 80 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், டாக்டர் மூர்த்தி, குணசேகரன் பங்கேற்றனர். கீழ்வாலை அபுசாலிகுடும்பத்தினர் இதற்கான பொருட்களை வழங்கி உதவினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X