சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் இருப்பு உள்ளதா?

Added : மே 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : ரேஷன் கடைகளில், போதிய அளவு பொருட்கள் இருப்பு உள்ளதா என்பதை கண்காணித்து, உறுதி செய்யுமாறு, கூட்டுறவு இணை பதிவாளர்களுக்கு, உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக ரேஷன் கடைகளில், கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக, தலா ஒரு கடையில் தினமும், 200 நபர்களுக்கு மட்டும், அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால், ஒரு கார்டுதாரருக்கு வழங்க வேண்டிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், ஒரே நேரத்தில் வழங்குமாறு, ரேஷன் கடைகளை நடத்தும், கூட்டுறவு சங்கங்களுக்கு, உணவு துறை உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், ஒரு நாள் அரிசியும்; வேறு நாள், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன.

இதையடுத்து, உணவு வழங்கல் துறை ஆணையர், நேற்று முன்தினம் இரவு, நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் ஒதுக்கீட்டில், கிடங்குகளில் இருந்து, 75 சதவீதம், ரேஷன் கடைகளுக்கு, வரும், 20ம் தேதிக்கு முன் சப்ளை செய்ய வேண்டும். கார்டுதாரர்கள், திரும்பத் திரும்ப வருவதை தவிர்த்து, ஒரே நேரத்தில், அனைத்து பொருட்களையும் பெற்று செல்ல வசதியாக, ரேஷன் கடைகளில், போதிய அளவு இருப்பு உள்ளதா என்பதை, கூட்டுறவு மாவட்ட இணை பதிவாளர்கள், கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
17-மே-202009:56:34 IST Report Abuse
Ramachandran Rajagopal மாதாந்திர ஒதுக்கீடு அளவு ரேஷன் கடைகளுக்கு நகர்வு செய்த அளவு போன்றவை இணையதளத்தில் இருந்தும் ஒதுக்கீடு அளவிற்கு நகர்வு செய்யப்படவில்லை என்பதை அறிந்திருந்தும் ஒரே நேரத்தில் அனைத்து பொருட்களும் வழங்கவில்லை என ரேஷன் கடை நடத்துபவர்கள் மீது புகார் வருகிறது என உணவுத் துறை ஆணையர் கூறுகிறார்.இதிலிருந்து தெளிவாவது யாதெனில் அதிகார வர்கம் சேவை செய்யாமல் தூங்குகிறது என்பதே ஆகும்.நேரடியாக மக்களிடம் தொடர்புள்ள பணியாளர்கள் இவர்களால் பாதிக்கப் படுகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X