பொது செய்தி

தமிழ்நாடு

கொய்யா, சப்போட்டா அறுவடைதோட்டக்கலை அலுவலர் ஆய்வு

Added : மே 16, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த ஆனத்துார், சேமங்கலம் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நிலையில் உள்ள கொய்யா, சப்போட்டா ஆகிய பழவகைகள் சுகாதாரமான முறையில் அறுவடை செய்யப்படுகிறதா என தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.விழுப்புரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) அன்பழகன் தலைமையிலான குழுவினர், ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர்களுக்கு முக கவசம், கையுறைகள் மற்றும் கிருமி நாசினி வழங்கினர். மேலும், அறுவடை நேரத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். சுகாதாரமான முறையில் பழங்களை கூடைகளில் அடுக்கி, வெளியூர்களுக்கு சந்தைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.திருவெண்ணெய்நல்லுார் தோட்டக்கலை உதவி இயக்குநர் வெங்கடேசன், வேளாண் உதவி இயக்குநர் வேல், தோட்டக்கலை அலுவலர் கிருஷ்ணா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மாரியப்பன், கோபி, குருநாதன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X